சமையல் கேஸ் சிலிண்டர் ஊழியரின் சபாஷ்.. 20 வருடமாக பீகார் தேர்தலில் போட்டி.. ஒன்னில் கூட ஜெயிக்கலயாம்
பாட்னா: பீகார் மாநில தேர்தல் நெருங்கி வருகிறது.. தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு (NDA), ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் பாஜக மற்றும் மகா கூட்டமைப்பு (RJD, காங்கிரஸ்) போன்ற கட்சிகளுக்கு இடையேயான போட்டியை அதிகரிக்க செய்துள்ளது.. வேட்பாளர் பட்டியல்கள், பிரச்சாரங்கள் போன்ற தேர்தல் பரபரப்புக்கு நடுவில் லால் மகதோ என்ற வேட்பாளர், அம்மாநில மக்களின் கவனத்தை பெற்று வருகிறார். யார் இவர்? இந்த வேட்பாளரின் லட்சியம் என்ன?
பீகார் மாநில சட்டசபை தேர்தல் வரும்மாதம் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன..
ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில் இறுதியாக 48 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் முதற்கட்ட தேர்தலில் 24 பேரும் இரண்டாம் கட்ட தேர்தலில் 24 பேரும் போட்டியிடுகின்றனர்.
பீகார் பிரியாணி தள்ளுமுள்ளு
வேட்பாளர்கள் லிஸ்ட் ஒருபக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வர, பிரச்சாரங்களும் சூடுபிடித்து வருகின்றன.. பேரணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் வழக்கம் பீகாரில் உள்ள நிலையில், அதுதொடர்பான பரபரப்புகளும் அங்கு ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, பகதூர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தௌசிஃப் ஆலம் என்பவரின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியின்போது, பிரியாணிக்காக பொதுமக்கள் முண்டியத்து கொண்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு சண்டை இணையத்திலும் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது.
தேர்தல் மன்னன் - விடாமுயற்சி
இந்நிலையில், வேட்பாளர் ஒருவர் பீகார் மாநில மக்களின் கவனத்தை மீண்டும் கவர்ந்திழுத்துள்ளார்.. நம்ம ஊரில் தேர்தல் மன்னன் பத்மராஜன் போலவே, பீகாரிலும் ஒருவர் உள்ளார்.. சேலத்தை சேர்ந்த பத்மராஜன், ஓமியோபதி டாக்டராக இருந்தாலும், இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு லிம்கா, கின்னஸ் போன்ற சாதனை புத்தகங்களில் சாதனையாளராக இடம் பெற்றிருக்கிறார்.
240க்கும் மேற்பட்ட தேர்தல்களில் வேட்பாளராக களமிறங்கி போட்டியிட்டுள்ளார். ஒருமுறை கூட தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும், பத்மராஜனின் தேர்தலில் போட்டியிடும் முயற்சி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இவரை போலவே, பீகாரில் உள்ள வேட்பாளர் பெயர் லால் மகதோ.. இவர் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்து வருகிறார்.. கடந்த 20 ஆண்டுகளாக பீகார் மாநிலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் அதாவது MP, MLA, உள்ளாட்சி என அனைத்து தேர்தலிலும் போட்டியிட்டு வந்துள்ளார்.
ஆடுகள், கோழிகள், முட்டைகள்
"என்றும் விடாமுயற்சி" என்ற முழக்கத்துடன், தோல்விகளை அஞ்சாமல் தொடர்ந்து களமிறங்கும் அவரது உழைப்பு, உள்ளூர் அரசியலில் ஊக்கமாக மாறியுள்ளது.
இந்த முறையும் லால் மகதோ போட்டியிட்டுள்ளார்.. கேஸ் சிலிண்டர் விநியோகிப்பதால் அதிக வருமானம் கிடைப்பதில்லை என்றாலும் தன்னுடைய பிரச்சாரத்திற்கான செலவுகளை சமாளித்து கொள்கிறார்.. கணவரின் இந்த முயற்சிக்கு அவரது மனைவி முக்கியப் பங்கு வகிக்கிறார். ஆடுகள், கோழிகள், முட்டைகளை விற்று, அதில் பிரச்சார பணத்தை திரட்டி, கணவரின் தேர்தல் செலவுகளுக்கு உதவி செய்கிறாராம்.
மகிழ்ச்சியில் தம்பதி
தன்னுடைய ஊரில் நிலவிவரும் பிரச்சனைகளையே பிரச்சாரமாக முன்னெடுத்து வருகிறார்கள் இந்த தம்பதி.. தேர்தல் என்பது வாக்குகளை வாங்குவது அல்ல, மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு" என்று மகிழ்ந்து சொல்கிறார்கள் இந்த தம்பதியினர்.
20 வருடங்களாக தேர்தலில் போட்டியிட்டு ஒருமுறைகூட வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த வேட்பாளரின் முயற்சியானது சாதாரண மக்களின் அரசியல் கனவை ஊக்குவிப்பதாக கருதப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications