பள்ளி மதிய உணவில் வண்டுகள்.. 'விட்டமின்' எனக் கூறி சாப்பிட வைத்த ஹெச்.எம்.. இது "பீகார் மாடல்"
பாட்னா: பீகாரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் போடப்பட்ட மதிய உணவில் பூச்சிகளும், வண்டுகளும் இருப்பதாக கூறிய குழந்தைகளிடம் அவை விட்டமின் சத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறிய பள்ளி முதல்வர், அந்த பூச்சிகள் இருந்த உணவையே ஒரு மாதமாக சாப்பிட வைத்த கொடுமை பீகாரில் அரங்கேறியுள்ளது.
ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்காகவும், அவர்களது இடைநிற்றலை தடுப்பதற்காகவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால், பல பள்ளிகளில் இந்த திட்டத்திற்காக அரசு ஒதுக்கிய நிதியை கையாடல் செய்து, மாணவர்களுக்கு மிக மோசமான தரத்தில் உணவுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் இந்த திட்டத்தில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன.

உ.பி.யில் அரங்கேறிய கொடுமை..
உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவாக வெறும் வெள்ளை சாதமும், உப்பும் மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், பள்ளியில் இருந்த நோட்டீஸ் பலகையிலோ, மதிய உணவாக சப்பாத்தி, பருப்பு தால், காய்கறிகள், சாதம் ஆகியவை வழங்கப்படுவதாக எழுதப்பட்டிருந்தது. இதனை ஒரு குழந்தையின் தந்தை வீடியோ எடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தினார். அதே உத்தபிரதேசத்தில் வேறொரு அரசுப் பள்ளியில் வெறும் சப்பாத்தியும், உப்பும் மதிய உணவாக வழங்கப்பட்டது. ஆனால், இப்படி உணவை வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காமல், அதை வெளிப்படுத்திய நிருபரை உ.பி. அரசு சிறையில் அடைத்தது வேறு கதை. இவ்வாறு ஏழைகளாக பிறந்த ஒரே காரணத்துக்காக, ஏதோ நாய்களுக்கு சாப்பாடு கொடுப்பது போல பள்ளிகளில் குழந்தைகளுக்கு தரம் கெட்ட உணவு வழங்கப்பட்டு வருகிறது. அப்படியொரு சம்பவம்தான் பீகாரில் நடந்துள்ளது.

சாதத்தில் பூச்சிகள்..
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள லால்ஜங் அடதுல்லாபூர் பகுதியில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 5-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் தினமும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அரைகுறையாக வெந்து போன சாதமும், தண்ணி பருப்பு சாம்பாருமே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இதனிடையே, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மதிய உணவு சாதத்தில் இருந்து பூச்சிகளும், வண்டுகளும் அதிகமாக வந்துள்ளன.

"பூச்சிகள் அல்ல விட்டமின்கள்.."
இந்நிலையில், பள்ளிக் குழந்தைகள் இதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் இந்த விவகாரம் தலைமை ஆசிரியர் முகமது மிஸ்வாதுனிடமும் சென்றது. ஆனால், அவரோ குழந்தைகளிடம் இது பூச்சிகள் அல்ல. விட்டமின் சத்துகள் என்றும், ஒன்றுவிடாமல் அனைத்தையும் சாப்பிடுமாறும் கூறியுள்ளார். இதனை நம்பி, குழந்தைகளும் ஒரு மாதத்துக்கும் மேலாக பூச்சிகள் இருந்த உணவை சாப்பிட்டுள்ளனர்.

கொந்தளித்த பெற்றோர் - போராட்டம்
இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு குழந்தைகள் சிலர், பள்ளியில் நாங்கள் பூச்சிகளை தின்போம் எனக் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவர்களிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது நடந்த விஷயத்தை குழந்தைகள் கூறியுள்ளனர். இதனால் கொந்தளித்துப் போன பெற்றோர், பள்ளிக் குழந்தைகளை பூச்சிகளை சாப்பிட செய்த முதல்வரை நீக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த பீகார் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications