அத்வானி காலமே பரவாயில்ல.. இப்போது பாஜகவில் வகுப்புவாதம் அதிகரித்துள்ளது - லாலு பிரசாத் அட்டாக்
பாட்னா: அத்வானி காலத்தை விட தற்போது பாஜகவில் வகுப்புவாதம் அதிகரித்துள்ளது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்து உள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர், "90 களை காட்டிலும் தற்போது பாஜகவின் வகுப்புவாத குணம் தீவிரமடைந்து உள்ளது. அத்வானி காலத்தில் தொடங்கிய இந்த வகுப்புவாதம் பாஜகவில் இப்போது இன்னும் தீவிரமடைந்து உள்ளது. அத்வானிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே எந்த விதமாக வித்தியாசமும் இல்லை. இருவரில் எந்த ஒருவரும் கூடுதலாகவோ குறைவாகவோ இதற்கு பொறுப்பாக மாட்டார்கள்.

பாபர் மசூதி இடிப்பில் இவர்கள் அனைவருக்கும் சமமான பொறுப்பு உள்ளது. என்னைப் பொறுத்தவரை, மோடிக்கும் அத்வானிக்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது. நான்பிரித்தாளும் அரசியலை செய்த அனைவருக்கும் எதிராக போராடினேன். நான் 1990 ஆம் ஆண்டுகளில் வகுப்புவாதத்திற்கு எதிராக இருந்தேன். இன்றும் தொடர்ந்து அப்படியே இருக்கிறேன். வகுப்புவாதத்திற்கு எதிரான எனது அரசியல் போராட்டம் இன்னும் மாறவே இல்லை. இப்போது நடப்பது அப்பட்டமான வகுப்புவாத அரசியல்தான்.
ஒரு காலத்தில் இந்தியா எப்படி இருந்தது. இந்தியாவில் ராமர் கோவில் எந்த விதமான தாக்கத்தையும் விளைவிக்காது. ராமர் கோயில் திறப்பு என்பது பாஜக - ஆர்எஸ்எஸ் விவகாரம் என்ற காங்கிரஸ் கட்சியின் கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். நாம் அனைவரும் ராமரின் விசுவாசிகள். ஆனால் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் முற்றிலும் அரசியலுக்கானது. இதற்கும் மத நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. மக்கள் இதை புரிந்துகொள்ள முடியும். இது எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன, மக்கள் நலனுக்காக ஒற்றுமையாக இருந்து போராடுவதே ஒரே வழி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் சொல்வது தேர்தல் நோக்கத்தில் அல்ல. மண்டல் ஆணையம் வழங்கிய அறிக்கையின்போதே சமூக நீதிக்கான போராட்டத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மக்களை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்வது ஒன்று இரண்டு தேர்தல்களில் முடிந்துவிடாது. அது நீண்ட கால செயல்திட்டம்." என்றார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications