2வது மகன் போதும்.. மூத்த மகனை ஆர்ஜேடி கட்சி + குடும்பத்தில் இருந்து அதிரடியாக நீக்கிய லாலு பிரசாத்
பாட்னா: ஆர்ஜேடி கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜ் பிரதாப் யாதவை 6 ஆண்டுகள் காலம் கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக செயல்பட்டவர் லாலு பிரசாத் யாதவ். பீகார் முன்னாள் முதல்வரான இவர் மத்திய அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். தற்போது வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி உள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியை தேஜஸ்வி யாதவ் வழிநடத்தி வருகிறார். கட்சியின் தலைவராக தேஜஸ்வி யாதவ் செயல்பட்டு வருகிறார். தற்போது பீகாரில் எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் உள்ளார்.
அதேபோல், லாலு பிரசாத் யாதவின் இன்னொரு மகன் பெயர் தேஜ் பிரதாப் யாதவ். இவர் தேஜஸ்வி யாதவின் அண்ணன். இந்நிலையில் தான், அவரது பொறுப்பற்ற நடத்தை, குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதை காரணம் காட்டி அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் வரை லாலு பிரசாத் யாதவ் நீக்கி உள்ளார்.
இந்த நீக்கத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது தேஜ் பிரதாப் யாதவின் முகநூல் பக்கத்தில், அனுஷ்கா யாதவ் உடனான தனது காதல் மற்றும் நீண்டகால உறவு பற்றி வெளியிட்டு இருந்தார். அதில் தேஜ் பிரதாப் யாதவ் தானும், அனுஷ்கா யாவும் 12 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். உறவில் இருக்கிறோம் என்று கூறியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டதாகவும் தேஜ் பிரதாப் யாதவ் கூறியிருந்தார். இந்த சர்ச்சையை தொடர்ந்து தான் தேஜ் பிரதாப் யாதவை, தந்தை லாலு பிரசாத் யாதவ் இன்று கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் வரை நீக்கி உள்ளார்.
இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தனிப்பட்ட வாழ்க்கைக்கான தார்மீக மதிப்புகளை மீறுவது என்பது எங்களின் சமூக நீதி போராட்டத்தை பலவீனப்படுத்தகிறது. மூத்த மகனின் செயல்பாடு, பொறுப்பற்ற நடத்தை உள்ளிட்டவை எங்களின் குடும்ப மரபுகளுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் நான் அவரை கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் நீக்குகிறேன். இனிமேல் அவருக்கு என் கட்சியிலும், குடும்பத்திலும் எந்த பங்கும் இருக்காது. அவர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்'' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications