லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது... சிறுநீகரம் 25% மட்டும் செயல்பாடு..!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருடைய சீறுநீரக செயல்பாடுகள் 25% என்கிற அளவுக்கு சுருங்கிவிட்டதாகவும் இதனால் லாலுவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

Lalu Prasad Yadav health is deteriorating day by day

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017-ம் ஆண்டு சிறைக்கு சென்ற லாலுவுக்கு அடுத்த சில மாதங்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ராஞ்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனை சிலர் லாலு நாடகமாடுவதாக விமர்சித்தனர்.

ஆனால் உண்மையிலேயே லாலுவின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதை அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனைக் காவலில் வைக்கப்பட்டு லாலுவுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லாலு பிரசாத் யாவதின் சிறுநீரக செயல்பாடு 25% என்கிற அளவுக்கு குறைந்துவிட்டதாக அவரது மருத்துவர் உமேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். எதுவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்பதால் லாலுவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே லாலு பிரசாத் யாதவ் கடந்த 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. லாலுவின் உடல்நிலை குறித்த விவரத்தை சிறைத்துறை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+