கருணாநிதி வழியை பின்பற்றுங்கள்...ஸ்டாலினுக்கு லாலு பிரசாத் வாழ்த்து
பாட்னா : தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னனியில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்க போவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் திமுக அதிக இடங்களில் வெற்றி முகத்தில் இருப்பதற்கு தலைவர்கள் பலரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவும் ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், திரு.ஸ்டாலின் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய கலைஞர் கருணாநிதியை போன்று நீங்களும் சமூக நீதியை முன்னெடுத்து சென்று திராவிட சகோதர, சகோதரிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு லாலு பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

லாலு பிரசாத்தின் இந்த வாழ்த்து பதிவை ஆயிரக்கணக்கானவர்கள் ரீட்வீட் செய்தும், லைக் செய்தும் வருகின்றனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை குறிப்பிட்டு லாலு பிரசாத் வாழ்த்து கூறி இருப்பது திமுக தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications