காதலியின் செல்போன் நீண்ட நேரம் பிஸி! ஆத்திரத்தில் கிராமத்திற்கே மின்சாரத்தை துண்டித்த காதலன்
பாட்னா: நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்ததால் கோபமடைந்த காதலன், அவருடைய கிராமத்திற்கு செல்லும் மின்சார வயர்களை கட்டிங் பிளேயரால் ஒட்டுமொத்தமாக துண்டித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வீடியோ வைரலாகி வருகிறது. போலீஸாரும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீகாரில் காதலன் ஒருவர் தனது காதலியிடம் பேச வேண்டும் என்பதற்காக அவருடைய போனுக்கு அழைத்துள்ளார். ஆனால் காதலியின் செல்போன் பிஸியாக இருந்தது. இதனால் சிறிது நேரம் காத்திருக்காத அவர் மீண்டும் தனது காதலிக்கு போன் செய்தார்.

அப்போதும் அவருடைய போன் பிஸியாகவே இருந்தது. விடாமல் அந்த பெண்ணுக்கு போன் செய்தும் அவர் எடுக்காமல் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருந்தாராம். போன் பேசிக் கொண்டிருக்கும் போது வெயிட்டிங் கால் நிச்சயம் வரும், அப்போது யார் அழைக்கிறார்கள் என்பதும் தெரியும்.
முக்கியமானவர்கள், முக்கிய விஷயங்களுக்கு அழைக்கிறார்கள் என்றால், பேசிக் கொண்டிருக்கும் இணைப்பை அப்படியே hold-ல் போட்டுவிட்டு புதிய இணைப்பில் பேசலாம். பின்னர் அந்த இணைப்பு கட்டானது, hold செய்யப்பட்டது ஆக்டிவ்வாகும்.
போனுக்கு செகன்ட் கால் (second call) வருவதை கூட பார்க்காமல் அப்படி என்ன பேச்சு, அப்படி யாருடன்தான் பேச்சு என கோபமடைந்தார் காதலன். இதனால் வீட்டுக்குள்ளேயே அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனை போல் அலைந்த அவர், மீண்டும் போன் போட்ட போதும் லைன் பிஸியாகவே இருந்தது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த காதலன், நேராக காதலியின் கிராமத்திற்கு சென்றார். அங்கு போய் காதலியை பளார் விட்டு "யாரிடம் பேசிக் கொண்டிருந்தாய்" என்று கேட்கலாம் என இருந்தார்.
ஆனால் அதுவரை அவருக்கு ஆத்திரம் தாங்கவில்லை. இதனால் நேராக மின்கம்பத்தின் மீது பெரிய கட்டிங் பிளேயருடன் ஏறினார். காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின் வயரை துண்டித்தார். உடனே அந்த ஊருக்கு சென்ற மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு கிராமமே இருளில் மூழ்கியது.
இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் வந்து பார்த்த போது மின் வயர் துண்டிக்கப்பட்டிருந்தது. இது யாரோ வேண்டுமென்றே செய்த வேலை என்பதை புரிந்து கொண்ட மின்வாரிய ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். எனினும் மின் இணைப்பை சரி செய்து இருளில் இருந்த கிராமத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் அதாவது மின் கம்பத்திற்கு பக்கத்தில் ஒரு சிசிடிவி கேமரா இருந்ததை கண்டனர். உடனே அதை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இளைஞர் மின் வயரை துண்டித்த காட்சிகள் இருந்ததை போலீஸார் கண்டனர்.
சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது காதலிக்கு நீண்ட நேரமாக போன் போட்டும் அவர் போனை எடுக்காமல் அவருடைய நம்பர் பிஸியாக இருந்ததால் ஆத்திரத்தில் அவரது கிராமத்திற்கு செல்லும் மின் வயரை கட் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
காதலி போன் எடுக்காவிட்டால் ஊர் மக்கள் என்ன பாவம் செய்தார்கள் என கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். கரண்டை கட் செய்யும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்றும் கேள்விகள் எழுந்தன.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications