மோடி காரணமில்லை.. மக்களின் திட்டம் தான் காரணம்.. பீகார் தேர்தல் முடிவால் உற்சாகத்தில் இடதுசாரிகள்
பாட்னா: பாஜக கட்டவிழ்த்துவிட்ட "தீய இனவாத பிரச்சாரத்தை" தவிர வேறு எந்த "மோடி காரணியும்" பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் இல்லை என்று சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் ராஷ்டிரிய ஜனதா கட்சி (ஆர்ஜேடி) தலைமையிலான மகாகத்பந்ன் கூட்டணியில் இடம் பெற்ற இடதுசாரிகள் கட்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது தெரிகிறது.
70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், அதில் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் இடதுசாரிகள் 16 இடங்களில் வென்றுள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி பீகாரில் 125 இடங்களில் வென்றது. ஆர்ஜேடி 75 இடங்களில் வென்றது. அதற்கு அடுத்தபடியாக பாஜக 74 இடங்களிலும் ஜேடியூ- 43 இடங்களிலும், காங். 19 இடங்களில் சிபிஐஎம்எல்-12 இடங்களிலும், மஜ்லிஸ் கட்சி- 5 இடங்களிலும், விஐபி-4 இடங்களிலும், ஆவாம் மோர்ச்சா-4 இடங்களிலும், சிபிஎம்-2, சிபிஐ-2 இடங்களிலும், எல்ஜேபி-1 இடத்திலும், பகுஜன் சமாஜ்-1 இடத்திலும், சுயேட்சை-1 இடத்திலும் வென்றனர்.

தீபங்கர் பட்டாச்சார்யா
பீகார் தேர்தல் முடிவு குறித்து பேசிய சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, மகாகத்பந்தனின் வெற்றியைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார். "இது மிகவும் எழுச்சியூட்டும் தேர்தல் யுத்தம். இது இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் உண்மையான எழுச்சி போல் இருந்தது. இறுதி முடிவைப் பொருட்படுத்தாமல், தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் பீகார் மக்கள் முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளனர்: என்று நான் கூறுவேன்" என்றார்.

விமர்சனம் வந்திருக்காது
கூட்டணியின் ஒரு பகுதியாக இடது கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட்டிருக்க வேண்டுமா என்று கேட்கப்பட்டபோது, சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா,, "எம்.எல் மற்றும் பிற இடது கட்சிகள் ஒட்டுமொத்தமாக கூட்டணிக்குள் சிறந்த பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அத்துடன் விமர்சனங்கள எழுந்திருக்காது என்றும் நினைக்கிறேன்..

இனவாத பிரச்சாரம்,
பாஜக கட்டவிழ்த்துவிட்ட "தீய இனவாத பிரச்சாரத்தை" தவிர வேறு எந்த "மோடி காரணியும்" வெற்றிக்கு காரணம் இல்லை. பாஜகவின் இனவாத பிரச்சாரம், தேர்தலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் சில விளைவுகளை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

பாஜகவுக்கு பொறுப்பு உண்டு
பீகார் மக்கள் நிதீஷ் குமாருக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. பீகாரில் ஜே.டி.யுவின் பங்காளியாகவும், அவரது அரசாங்கத்தின் தோல்விக்கு பாஜகவுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. லாக்டவுனின் போது மக்கள் கைவிடப்பட்டனர், எங்கள் தோழர்கள் அவர்களுக்காக நின்று குரல் கொடுத்தனர், "என்றார்.

பீகாரில் பலம் இல்லை
பட்டாச்சார்யாவிடம் பீகாரில் 70 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் குறித்து கேட்ட போது "பலரும் கூறியது போல் போட்டியிடுவதற்கான அமைப்பும் பலமும் காங்கிரசுக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் சொன்னது போல், விமர்சனங்களும் பின்னால் வரலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications
