நூலிழையில் பீகாரில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் கூட்டணி.. பாஜக கூட்டணிக்கு பின்னடைவு.. கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை விட எதிர்கட்சிகளான ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றலாம் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் பின்வருமாறு:

பீகாரில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

விரைவில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

nda-alliance-likely-to-lost-with-congress-alliance-in-bihar-assembly-election-says-lok-poll-pre-pol

பாஜக கூட்டணியில் யார் யார்?

இதனால் பீகார் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த முறை பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளன.

காங்கிரஸ் கூட்டணியில் யார் யார்?

மறுபுறம் எதிர்க்கட்சிகள் மகாகத்பந்தன் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கருத்து கணிப்பு முடிவு

இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பாக Lok Poll சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தொகுதிக்கு 300 பேர் என்று மொத்தம் 72,900 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி பீகாரில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது எனவும், நூலிழையில் பாஜக கூட்டணியை விட காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக - காங்., கூட்டணிக்கு எத்தனை இடம்?

இந்த கருத்து கணிப்பின்படி பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 38 சதவீதம் முதல் 41 சதவீத ஓட்டுகளை பெற்று 105 முதல் 114 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி 39 சதவீதம் முதல் 42 சதவீத ஓட்டுகளை பெற்று 118 முதல் 126 தொகுதிகளை கைப்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மற்றவர்கள் 12 முதல் 16 சதவீத ஓட்டுகளுடன் 2 முதல் 5 தொகுதிகளை பிடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிசோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது. இருப்பினும் அந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெஜாரிட்டி எவ்வளவு?

பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வெல்ல வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பாஜக கூட்டணியை விட காங்கிரஸ் - ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

கடந்த முறை என்ன நடந்தது?

முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கு பிறகு தலைவர்கள் கட்சி மாற்றம் உள்ளிட்டவற்றால் சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. தற்போதைய சூழலில் பீகாரில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 131 எம்எல்ஏக்கள் உள்ளன. பாஜகவுக்கு 80 எம்எல்ஏக்கள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 45 எம்எல்ஏக்கள், எம்ஏஎம் (எஸ்) கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள் சுயேச்சைகள் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 131 எம்எல்ஏக்கள் உள்ளன.

அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 111 எம்எல்ஏக்கள் உள்ளன. அதிகபட்சமாக லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு 77 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள், CPI(ML)L கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளன. ஒரு சுயேச்சையின் ஆதரவு உள்ளது. அதேபோல் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளது. இப்படியான சூழலில் இந்த கருத்து கணிப்பு பாஜக கூட்டணியினருக்கு அதிர்ச்சியைம், காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணிக்கு நம்பிக்கையையும் தரும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+