சிறையிலிருந்தபடி செல்போனில் பேசுகிறார் லாலு.. என்னன்னு பாருங்கப்பா.. நிதிஷ் போட்ட குண்டு!
பாட்னா: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனக்கு நெருக்கமானவர்களுடன் செல்போனில் பேசி கொண்டிருப்பதாக நிதிஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

லாலு பிரசாத்
ஜார்க்கண்ட் சிறையில் உள்ள அவர் தற்போது உடல்நலக் குறைவால் ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் லாலு பிரசாத் தனக்கு நெருக்கமானவர்களுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

லாலு மகன் மறுப்பு
இது சிறை தண்டனைகளுக்கு எதிரான செயல் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதை லாலுவின் மகன் தேஜ் பிரதாப் மறுத்துள்ளார்.

மக்கள் சந்திப்பு
இதுகுறித்து தேஜ் யாதவ் கூறுகையில் எனது தந்தையுடன் நான் பேசி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. சனிக்கிழமைகளிலும் சிறை விதிகளின்படி அவரை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

திணிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வுவோம் என தெரிந்தே நிதிஷ்குமார் ஆதாரமற்ற குற்றச்சாட்டை என் தந்தை மீது திணிக்கிறார் என தேஜ் பிரதாப் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
