Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதிஷ் குமார் ராஜினாமா.. பீகாரை கைப்பற்றும் பாஜக.. அடுத்த முதல்வர் யார்? டாப் 4 பெயர்கள் இதோ

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜ்யசபா தேர்தலில் களமிறங்கி உள்ளார். இதனால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதன்மூலம் பீகாரில் முதல்வர் பதவி பாஜக வசம் செல்ல உள்ளது. இந்நிலையில் தான் பீகாரின் புதிய முதல்வர் ரேஸில் உள்ள 'டாப்' 4 தலைவர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் உள்பட பிற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் இந்த கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக பாஜக 89 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளிலும் வென்றது.

nitish-kumar-resign-who-will-be-the-next-bihar-chief-minister-bjp-top-names-here

இதையடுத்து நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வரானார். இந்நிலையில் தான் தற்போது நிதிஷ் குமார் மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலுக்குள் நுழைகிறார். பீகாரில் காலியாக உள்ள 5 ராஜ்யசபா இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது. இதற்கு நிதிஷ் குமார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன்மூலம் பீகார் மாநில முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டு ராஜ்யசபா எம்பியாக தேசிய அரசியலுக்குள் செல்ல உள்ளார். விரைவில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் பீகாரில் முதல் முறையாக பாஜகவின் ஆட்சி அமைய உள்ளது. பீகாரில் இதுவரை பாஜக ஆட்சி அமைந்ததே இல்லை. முதல்வராக ஒருவர்கூட பாஜகவில் இருந்தது இல்லை.

ஆனால் தற்போது நிதிஷ் குமார் ராஜினாமாவால் கூட்டணி சார்பில் முதல்வர் பதவி பாஜக வசம் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் பாஜக சார்பில் புதிய முதல்வர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தான் பீகாரின் அடுத்த முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது பாஜக சார்பில் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறது. மாநில உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவர் பீகாரில் பாஜகவின் முகமாக உள்ளார். 2வது முறையாக துணை முதல்வராக செயல்பட்டு வரும் நிலையில் முதல்வர் பதவியில் அமர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் பீகார் முதல்வர் பதவிக்கான ரேஸில் நித்யானந்த் ராயும் உள்ளார். இவர் மத்திய உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் பீகார் முன்னாள் பாஜக தலைவராக பொறுப்பு வகித்தவர். பீகாரின் ஹாஜிப்பூரிலிருந்து நான்கு முறை எம்எல்ஏவாகவும், 2014-ம் ஆண்டில் இருந்து உஜியார்பூர் தொகுதியில் எம்பியாகவும் தொடர்ந்து வருகிறார்.

இவர்கள் 2 பேரும் தான் பாஜகவின் முதல்வர் ரேஸில் முன்னிலையில் உள்ளனர். இவர்கள் தவிர பீகாரில் தொழில்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவின் திலீப் ஜெய்ஸ்வால் மற்றும் திகா எம்எல்ஏ சஞ்சீவ் சவுராசியா ஆகியோரும் முதல்வர் பதவியக்கான ரேஸில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பீகாரில் புதிய ஆட்சி அமையும்போது நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது வரை நிஷாந்த் குமார் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து விலகி உள்ளார். நிதிஷ் குமாருக்கு தற்போது 75 வயது ஆகிறது. இதனால் அவருக்கு அடுத்ததாக மகன் நிஷாந்த் குமாரை அரசியலுக்கு களமிறக்க நிதிஷ் குமார் விரும்புகிறார்.

இதனால் தான் நிதிஷ் குமார் தேசிய அரசியலுக்கு சென்றுள்ளார். தந்தையும், மகனும் மாநிலத்தில் முதல்வர், துணை முதல்வராக இருந்தால் மக்களிடம் அதிருப்தி ஏற்படலாம். இதனால் தன்னை தேசிய அரசியலுக்கு நிதிஷ் குமார் மாற்றி உள்ளார். இதன்மூலம் தனது மகன் நிஷாந்த் குமாரை மாநில அரசியல் இறக்க திட்டமிட்டுள்ளார்.

நிஷாந்த் குமாருக்கு அரசியல் அனுபவம் இல்லை. இதனால் உடனடியாக அவருக்கு முதல்வர் பதவியை வழங்க முடியாது. எனவே பாஜக வசம் முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு துணை முதல்வர் பதவியை மகன் நிஷாந்த் குமாருக்கு வழங்க நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளார். இதனால் தான் அவர் முதல்வர் பதவியை துறந்து தேசிய அரசியலில் ராஜ்யசபா எம்பியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+