"பாஜக 4000 எம்பி சீட் வெல்லும்.." உளறி கொட்டிய நிதிஷ்குமார்.. எல்லாம் கேட்ட மோடி சொன்ன நறுக் பதில்
பாட்னா: பீகாரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாஜக 4000 இடங்களில் வெல்லும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உளறிக் கொட்டிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய ஜேடியு தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் பாஜக உடன் கை கோர்த்துள்ளார். இன்று அங்கே இரு கட்சிகள் இணைந்து நடத்திய நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம்: இந்த பொதுக்கூட்டத்தில் பீகார் முதல்வரும் ஜேடியு கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் சுமார் 25 நிமிடங்கள் பேசினார். அவரது பேச்சு இணையத்தில் உடனடியாக டிரெண்ட் ஆனது. ஆனால், நல்ல விஷயத்திற்காக இல்லை. அவர் பேசும் போது பல இடங்களில் சொதப்பினார். குறிப்பாக பாஜக 4000 எம்பி இடங்களை வெல்லும் எனச் சொன்னது எல்லாம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது.
பீகாரின் நவாடா நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உடன் நிதிஷ்குமாரும் பங்கேற்றார். முதலில் பேச ஆரம்பித்த நிதிஷ்குமார் சுமார் 25 நிமிடங்கள் பேசினார். அவர் பேசி முடித்து அமர வந்த போது பிரதமர் மோடி அவரிடம், "இவ்வளவு நல்ல பேச்சை நீங்கள் கொட்டு இருக்கிறீர்கள்.. இதற்கு மேல் நான் பேசுவதற்கு எதுவும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
பாதங்களைத் தொட்டு வணங்கினார்: இதைக் கேட்டதும் நிகழ்ச்சியில் மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு நிதிஷ்குமார் வணங்கினார். இது குறித்த வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நிதிஷ்குமாரின் பேச்சு சிறிது நேரத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
உளறிக் கொட்டிய நதிஷ்: நிதிஷ்குமார் பேசும் போது, "வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்காகவே பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் பாஜக நிச்சயம் 4000 தொகுதிகளில் வெல்லும்" என்றார். அதிலும் முதலில் நிதிஷ்குமார் 4 லட்சம் எனக் கூற வந்தார்.. அதன் பிறகே சமாளித்தவாறே 4000 என்று கூறியிருக்கிறார்..
நமது நாட்டில் மொத்தமே 543 லோக்சபா தொகுதிகள் தான் இருக்கும் நிலையில், அதில் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதை பாஜக தனது டார்கெட்டாக வைத்துள்ளது. 400 என்று சொல்ல வந்த நிதிஷ்குமார் தான் 4000 எம்பிக்கள் என உளறிக் கொட்டி இருக்கிறார்.
25 நிமிடங்கள்: மேலும், பொதுவாகப் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மற்ற தலைவர்கள் சில நிமிடங்கள் தான் பேசுவார்கள். ஆனால், நிதிஷ்குமார் முழுமையாக 25 நிமிடங்கள் பேசி இருக்கிறார். இது கிட்டதட்ட அனைவரையும் பொறுமையிழக்கச் செய்தது. ஒரு கட்டத்தில் மேடையின் முன் வரிசையில் அமர்ந்த நிதிஷ் குமாரின் ஜேடியுவின் மூத்த தலைவரான விஜய் குமார் சவுத்ரி, தனது கடிகாரத்தைக் காட்டி பேச்சை முடிக்குமாறு நிதிஷ்குமாருக்கு சைகை காட்டினார்.
பல தலைவர்கள் நிதிஷ்குமார் எப்போ தான் பேச்சை முடிப்பார் என எழுந்து நிற்பதையும் பார்க்க முடிகிறது. இவ்வளவு நடந்த பிறகும் நிதிஷ்குமார் எந்தவொரு சலனமும் இல்லாமல் பேச்சைத் தொடர்ந்தார். சில நிமிடங்களுக்கு பிறகே அவர் தனது பேச்சை முடித்தார். நிதிஷ்குமாரின் இந்த மாரத்தான் பேச்சில் வேறு சில சர்ச்சை டாபிக்குகளும் இருந்ததாக பாஜகவின் முணுமுணுக்கிறார்கள்.
முதல்முறை இல்லை: அதேநேரம் பொதுநிகழ்ச்சிகளில் நிதிஷ்குமார் இப்படி உளறிக்கொட்டி மாட்டுவது இது முதல்முறை இல்லை. கடந்த 2 ஆண்டுகளாகவே இப்படிப் பல முறை அவர் உளறிக்கொட்டி மாட்டி இருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த கூட்டத்தில் உள் துறை தொடர்பாகப் புகார் ஒன்றை எழுப்பினார். அப்போது நிதிஷ்குமார் அங்கிருந்த அதிகாரியை உள்துறை அமைச்சருக்கு போன் போடச் சொன்னார். விஷயம் என்னவென்றால் உள் துறையை அவர் தான் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications