போச்சே! நிதிஷ் வெளியேறியதால் பெரும் பின்னடைவு! கையை பிசையும் காங்கிரஸ்.. என்ன ஆகும் இந்தியா கூட்டணி?
பாட்னா: இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியிருப்பது அந்தக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமாரின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணிக்குள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்தன. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் என 28 கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைந்தன. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை முழு மூச்சாக முன்னெடுத்தவர் நிதிஷ் குமார்.

இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில்தான் நடைபெற்றது. இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசத்தொடங்கிய போது பிரச்சினை ஏற்பட்டது. இதனால், மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். மறுநாளே கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் பஞ்சாபில் தனித்து போட்டியிடுவாதக அறிவித்தது.
இதனால், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் என்ன ஆகும் என அரசியலில் விவாதங்கள் அதிகரித்த நிலையில், கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமாரும் அந்தக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். இது இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தன்னை முன்னிறுத்தவில்லை என்ற அதிருப்தியால் நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
நிதிஷ் குமார் வெளியேறினார்: பாஜகவுடன் இனி சேர்வதற்கு பதிலாக உயிரை விடுவேன் என நிதிஷ் குமார் ஓராண்டுக்கு முன் பேசியிருந்தார். ஆனால், ஓராண்டில் தனது நிலைப்பாட்டை அப்படியே தலைகீழாக நிதிஷ் மாற்றியது இந்தியா கூட்டணி கட்சிகளை அதிர்சியில் உறைய வைத்துள்ளது. மறுபக்கம் பாஜகவோ, இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று சொல்லிக்கொண்டே வந்தது. தற்போது இந்தியா கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் வெளியேறியிருப்பதை குஷியோடு ரசித்துக் கொண்டு இருக்கிறது பாஜக.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், நிதிஷ் குமார் தற்போது எடுத்துள்ள முடிவு இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியே வந்த உடனேயே ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
தொகுதி பங்கீட்டில் கெடுபிடி: இந்தியா கூட்டணியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர காங்கிரஸ் முயற்சிப்பதாக சாடினார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் நிதிஷ் குமார் முதன்மை வகித்த போதிலும் காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டணியை கபளீகரம் செய்ய பார்ப்பதாக விமர்சித்து இருக்கிறார். மேலும், மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் இடத்தில் அந்தக் கட்சிகளை போட்டியிட காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்றும் அங்கும் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கேட்டு வற்புறுத்தியது என்றும் சொல்லியிருக்கிறார்.
தன்னை தக்க வைத்துக்கொள்ள போராடும் காங்கிரஸ் கட்சி பிராந்திய கட்சிகளை தற்போது முடித்துவிடும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் கூறியிருக்கிறார். இந்தியா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பீகாரில் ஏற்பட்ட அரசியல் அதிரடியை காட்டி மாநில கட்சிகள் இனி காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீட்டில் கெடுபிடி காட்டும் வாய்ப்பு உள்ளது.
பெரும் பின்னடைவு: தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக மோடியின் செல்வாக்கு மற்றும் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் பலத்துடன் தேர்தலை சந்திக்க உள்ளது. அதே வேளையில், இந்தியா கூட்டணியோ நிதிஷ் குமார் வெளியேறி இருப்பதால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மக்கள் மத்தியிலும் இந்தியா கூட்டணி மீதான பார்வை தற்போது மாற வாய்ப்பு உள்ளது.
இதையெல்லாம் மீறி பாஜகவுக்கு கடுமையான சவாலை அளிக்கும் விதமாக இந்தியா கூட்டணி தயாராகிவிடும் என்று அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூறி வருகின்றன. இதற்கெல்லாம் முழுமையான விடை இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications