ஒரு சீட் கூட தராத பாஜக.. பீகாரில் சரிந்த முஸ்லிம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை.. வென்றது எத்தனை பேர்?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இந்த கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கிடையே தான் பீகாரில் இஸ்லாமிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. எத்தனை இஸ்லாமியர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்? அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள்?, முந்தைய தேர்தலில் இருந்து இந்த முறை இஸ்லாமிய எம்எல்எக்களின் எண்ணிக்கை எவ்வளவு சரிந்துள்ளது? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மாறாக ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தான் பீகார் தேர்தலில் இஸ்லாமியர்களின் வெற்றி சதவீதம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. பீகாரை எடுத்து கொண்டால் கடந்த 2022-23ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பில் மொத்த மக்கள்தொகை 13.07 கோடியாகும். இதில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17.7 சதவீதமாகும்.
குறிப்பாக சீமாஞ்சல் என்ற பிராந்தியத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இந்த பிராந்தியம் என்பது பீகாரில் உள்ள அராரியா, பூர்னியா, கதிஹார், கிஷன்கஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். வேட்பாளர் வெற்றி பெற இஸ்லாமியர்களின் ஓட்டுகள் மிகவும் முக்கியமாகும்.
ஆனால் நேற்றைய தேர்தல் முடிவில் வெற்றி பெற்ற இஸ்லாமிய வேட்பளர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது இந்த தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி மொத்தம் 23 இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக நிறுத்தினார். அதில் 5 பேர் வெற்றி பெற்றுள்னர். அதேபோல் ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 18 இஸ்லாமியர்களை இறக்கியது. அதில் 3 பேர் வென்றுள்ளனர்.
காங்கிரஸ் 10 இஸ்லாமிய வேட்பாளர்களை அறிவித்த நிலையில் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 4 இஸ்லாமியர்களை வேட்பாளராக்கிய நிலையில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இஸ்லாமியர்களை களமிறக்கிய நிலையில் இருவரும் தோல்வியடைந்தனர். அதேபோல் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ், சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்விபி கட்சிகள் சார்பில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அவர்கள் கரை சேரவில்லை. பாஜக சார்பில் இஸ்லாமியர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை.
இதனால் 2025 சட்டசபை தேர்தலில் பீகாரில் வெற்றி பெற்ற இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 11 ஆக சுருங்கி உள்ளனர். இது கடந்த 3 சட்டசபை தேர்தல்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். ஏனென்றால் கடந்த 2020ம் ஆண்டில் இஸ்லாமிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. இதில் 8 பேர் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்தவர். அதன்பிறகு ஓவைசியின் ஏஐஎம்ஐ கட்சியில் 5 பேர், காங்கிரஸில் 3 பேர், பகுஜன் சமாஜ் மற்றும் சிபிஐ(எம்எல்)(எல்) கட்சிகளுக்கு தலா ஒருவர் என்று மெத்தம் 19 பேர் எம்எல்ஏக்களாக இருந்தனர். இது 7.81 சதவீதமாகும். இந்த தேர்தலில் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்தது. அவரது கட்சி சார்பில் இஸ்லாமியர்கள் 11 பேர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர்.
அதேபோல் 2015ல் 24 எம்எல்ஏக்கள் இஸ்லாமியர்களாக இருந்தனர். மொத்த எம்எல்ஏக்களில் இது 9.87 சதவீதமாகும். அதிகபட்சமாக தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சியில் 12 பேர், காங்கிரஸில் 6 பேர், நிதிஷ் குமாரின் ஜேடியூவில் 5 பேர், சிபிஐ (எம்எல்)(எல்) கட்சியில் ஒருவர் இருந்தனர். மேலும், 2010ம் ஆண்டில் 19 இஸ்லாமியர்கள் எம்எல்ஏக்களாக இருந்தனர். மொத்த எம்எல்ஏக்களில் இது 7.81 சதவீதமாகும். அதிகபட்சமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சியில் 7 எம்எல்ஏக்கள் இருந்தனர். அடுத்ததாக தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சியில் 6, காங்கரிஸில் 3, எல்ஜேபியில் 2, பாஜகவில் ஒரு எம்எல்ஏக்கள் இருந்தனர். இப்படியான சூழலில் தான் தற்போது இஸ்லாமிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 11 ஆக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications