Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அல்லோகலமான ரயில் நிலையம்.. அறிவிப்பு திரையை பார்த்து கண்ணை மூடிய பெண்கள், குழந்தைகள்.. பப்பி ஷேம்!

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள எல்.இ.டி திரைகளில் விளம்பரங்களுக்கு பதிலாக திடீரென ஆபாச படங்கள் ஓடியது அங்கு இருந்த பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநில தலைநகர் பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள எல்.இ.டி திரைகளில் விளம்பரங்களுக்கு பதிலாக திடீரென ஆபாச படங்கள் ஓடியது அங்கு இருந்த பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. பெண்கள், மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பு பயணிகளும் இருந்த ரயில் நிலையத்தில் சுமார் 3 நிமிடங்கள் ஆபாச படங்கள் ஓடியது பயணிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பயணிகள் அங்கு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பயணிகள் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் ரயில் நிலையங்களில் ஆங்காங்கே எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டு இருப்பதை நாம் பார்த்து இருப்போம்.

ரயில் வருகை தரும் நேரம், கிளம்பும் நேரம் மற்றும் எந்த நடைமேடைக்கு ரயில் வரும் என்ற தகவல் அதில் இடம் பெற்று இருக்கும்.

 எல்.இ.டி திரைகள்

எல்.இ.டி திரைகள்

ரயில் நிலையங்களில் இருக்கும் எல்.இ.டி திரைகள் பயணிகள் நடைமேடடைகளை அறிந்து கொள்ள பெரிதும் உதவும் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக இந்த எல்.இ.டி திரைகளை பார்ப்பதுண்டு. சில நேரங்களில் விளம்பரங்களும் இந்த திரைகளில் ஓட விடப்படுகின்றன. சென்னையில் எழும்பூர், சென்டிரல் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் ஓடுவதையும் நாம் பார்த்து இருக்கக் கூடும். ரயில்வே வருவாயை பெருக்கும் வகையில் இத்தகைய விளம்பரங்கள் ஓடவிடப்படுவதாக தெரிகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.

ஆபாச படங்கள் ஓடியது

ஆபாச படங்கள் ஓடியது

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள இது போன்ற எல்.இ.டி திரையில் திடீரென்று ஆபாச படங்கள் ஓடியது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. நேற்று காலை 10 மணியளவில் விளம்பரத்திற்கு பதிலாக திடீரென ஆபாச படம் ஓடியது. இதைக் கவனித்த பெண் பயணிகள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலரும் முகம் சுழிக்க வைக்கும் வகையில் படங்கள் ஓடியது. சுமார் 3 நிமிடங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.

பயணிகள் போராட்டம்

பயணிகள் போராட்டம்

பயணிகள் பலரும் இதை தங்கள் செல்போனில் படம் பிடித்ததையும் பார்க்க முடிந்தது. பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பயணிகளும் இருந்த ரயில் நிலையத்தில் இப்படி திடீரென ஆபாச படம் ஓடியதால் கொந்தளித்த பயணிகள் உடனடியாக அங்கேயே போராட்டத்திலும் ஈடுபட்டனர். விரைந்து சென்ற ரயில்வே பாதுகாப்பு போலீசார் எல்.இ.டி ஸ்கீரினில் ஓடிக்கொண்டு இருந்த கிளிப்பை நிறுத்தினர். பாட்னா ரயில் நிலைய எல்.இடி திரையில் ஆபாச படங்கள் ஓடும் காட்சிகள் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நிதிஷ் குமாரை டேக் செய்து பகிர்வு

நிதிஷ் குமாரை டேக் செய்து பகிர்வு

முதல்வர் நிதிஷ் குமாரை டேக் செய்து பலரும் இந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ரயில்வே அமைச்சகத்தையும் டேக் செய்து பயணிகள் பலரும் புகார் தெரிவித்து ட்விட் செய்து இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாட்னா ரயில் நிலைய திரைகளில் விளம்பரங்கள் மற்றும் தகவல்களை ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ள தனியார் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 ஊழியர்கள் யாரேனும் தவறுதலாக..

ஊழியர்கள் யாரேனும் தவறுதலாக..

ரயில்வே நிர்வாகத்தால் அந்த நிறுவனமும் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். ரயில் நிலைய எல்.இ.டி திரையில் ஆபாச படங்கள் ஓடியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊழியர்கள் யாரேனும் தவறுதலாக இதை செய்து விட்டார்களா.. அல்லது ஹேக்கிங்க் எதுவும் செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான பாடனா ரயில் நிலையத்தின் எல்.இ.டி திரையில் ஆபாச படங்கள் ஒளிபரப்பானதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+