ஜெயிச்சா இப்படி ஜெயிக்கணும்.. இந்தியாவையே நடுங்க வைத்த பாஸ்வான் !
பாட்னா: மாபெரும் வெற்றி இன்று போஸ்டர் போட்டு காலத்தை ஓட்டும் டுபாக்கூர் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஜெயிச்சா இப்படி ஜெயிக்கணும்.. மாபெரும் வெற்றின்னா அது இதுதான் என்று சொல்லி அடித்தவர் ராம் விலாஸ் பாஸ்வான்.
1989ம் ஆண்டு அது.. நாடாளுமன்றத் தேர்தல் களை கட்டியிருந்தது. பீகாரின் ஹாஜிப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் ராம் விலாஸ் பாஸ்வான். 1977ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு மிகப் பிரமாதமான வெற்றியைப் பெற்றிருந்த நிலையில் 1989 தேர்தலை சந்தித்திருந்தார் பாஸ்வான்.

1977ல் அவர் காங்கிரஸ் வேட்பாளர் பாலேஸ்வர் ராம் என்ற தலைவரை 4 லட்சத்து 24 ஆயிரத்து 545 வாக்குகள் என்ற பிரமாண்ட வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவையே அதிர வைத்திருந்தார். இந்தத் தேர்தலில் பாஸ்வானை வேட்பாளராக நிறுத்தியவர் மாபெரும் தலைவர் ஜெய பிரகாஷ் நாராயண் ஆவார்.
ஆனால் 1989ம் ஆண்டு தேர்தலில் மேலும் ஒரு சாதனையைப் படைத்தார் பாஸ்வான். ஜனதாதளம் சார்பில் பாஸ்வான் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் மகாபீர் பாஸ்வான் நின்றார். அவரை தேர்தலில் 5 லட்சத்து 4 ஆயிரத்து 448 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நாட்டையே ஆச்சரியப்படுத்தினார் பாஸ்வான்.
அதுதான் நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் பெற்ற பிரமாண்ட வெற்றியாகும். அந்த வெற்றிக்குப் பிறகு பாஸ்வானும், ஹாஜிப்பூரும் பிரிக்க முடியாத இரட்டையர்களாகிப் போனார்கள். தொடர்ந்து அந்தத் தொகுதியில் பாஸ்வானே வென்று வந்தார். இடையில் 2009ம் ஆண்டு மட்டும் ஹாஜிப்பூர் பாஸ்வானை கைவிட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் தொகுதியை வென்றார். 2019 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. தனது தம்பியை நிறுத்தினார்.
இனி தான் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பையும் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார் பாஸ்வான். இப்போது நிரந்தரமாக ஹாஜிப்பூரை விட்டு அவர் பிரிந்து போய் விட்டார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications