Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிஸ்டர் அவுட் கோயிங் சார் ஜி... பிரதமர் மோடிக்கு நிக் நேம் வைத்த சத்ருகன் சின்ஹா!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பாஜகவின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவராக இருந்த நடிகர் சத்ருகன் சின்ஹா பிரதமரை தற்போது கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போது பிரதமர் மோடி குறித்து பதிவிட்டுள்ள ஒரு டிவீட்டில் அவருக்கு ஒரு புதிய அடைமொழியை கொடுத்துள்ளார். அவுட் கோயிங் சார் ஜி என்று ஆரம்பித்து மோடியை விமர்சித்து சத்ருகன் சின்ஹா டிவீட் செய்துள்ளார்.

ஹானரபிள் அவுட் கோயிங் சார் ஜி என்று ஆரம்பிக்கும் அந்த டிவிட்டில் நீங்கள் ஏன் சில டிவி சேனல்களை விலைக்கு வாங்கி இவ்வளவு பணத்தை விரயம் செய்கிறீர்கள்? பணம் கொடுத்து உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த கூட்டம் உங்களுக்கு அவசியமா? அவர்கள் உங்களது பெயரை எப்போது வேண்டும் என்றாலும் கோஷம் இடுவார்கள். நீங்கள் பேச துவங்கும்போதும் சரி அதற்கு முன்பும் சரி பேசிய பின்னரும் சரி எப்போது வேண்டும் என்றாலும் அவர்கள் கோஷம் இடுவார்கள். உங்களுக்காக கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் கண்ணசைவில் இந்த கூட்டம் கோஷம் எழுப்புவுது மிகவும் சகஜமானது. உங்கள் பேச்சில் ஆழமும் இல்லை அர்த்தமும் இல்லை என்று முடிகிறது அந்த டிவீட்.

Shatrughan Sinha calls PM Modi as Mr Outgoing Sir

அதற்கு அடுத்த டிவீட்டில் உங்களது தொடர் பேச்சுக்கள் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை முன் வைப்பதால் இந்த நாட்கள் மீண்டும் மீண்டும் எரிச்சலை ஊட்டுகின்றன. நீங்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியபோதும் உங்களுடைய ஆணவப் போக்கின்போதும் நான் உங்களது நலன் விரும்பிதான். இந்த இறுதி தருணத்திலாவது நேர்மைக்கு மாறுங்கள், நேர்மையாக செல்லுங்கள் என்று சாடியுள்ளார்.

அதற்கு அடுத்த டிவீட்டில் நீங்கள் வாடகைக்கு வாங்கிய சேனல்களுக்கோ அல்லது பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட செய்திகளை தரும் சேனல்களுக்கோ செல்லாமல் ரவிஷ்குமார், பிரசன் வாஜ்பாய் போன்றோர் போல உண்மையான செய்தியாளர்களை சந்தியுங்கள் என்று பிரதமரை சாடியுள்ள சத்ருகன் சின்ஹா அடுத்ததாக எதிர்கட்சிகளின் பிரதமர் யார் என்பதைக் குறித்தும் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். தண்ணீர் அதன் பாதையை அதுவே தீர்மானிப்பது போல மக்கள் தங்கள் பிரதமர் யார் என்பதை அவர்களே கண்டு கொள்வார்கள் என்றும் அது குறித்து நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் நெருக்கத்தில் மோடி தன்னை சவுகிதார் என்று அடைமொழி இட்டு அழைத்து வரும் வேளையில் சத்ருக்கன் சின்ஹா அவரை அவுட் கோயிங் சார் ஜி என்று அழைத்தது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+