Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெத்து காட்டிய நிதிஷ்குமார்.. வெத்துவேட்டான தேஜஸ்வி யாதவ்.. பீகாரில் மீண்டும் மண்ணை கவ்விய காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட RJD கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்றைய பீகார் தேர்தல் ரிசல்ட்டில் பின்னடைவை சந்தித்துள்ளார். 3வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே, பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சதீஷ் குமார் முன்னிலை வகிக்க, தேஜஸ்வி யாதவ் பின்னடைவை சந்திக்க, இது அந்த கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வியை தந்து வருகிறது.

இந்த முறை நடந்து முடிந்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டிகள் இருந்தாலும், உண்மையான போட்டி நிதீஷ் குமாருக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் இடையே தான் என்று கருதப்பட்டது.

Tejashwi Yadavs Bihar Nitish Kumar

அதாவது கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சர் நாற்காலியை தன்வசம் இறுக்கி பிடித்து வைத்துள்ள நிதிஷ் குமாருக்கும், முதன்முறையாக மாநிலத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் காத்திருந்த 35 வயது தேஜஸ்வி யாதவுக்கும் இடையேயான கடும் போட்டியாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.

முதலமைச்சர் கனவு

அதற்கேற்றவாறு, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் என்ற தலைப்பில் பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பில் தேஜஸ்வி யாதவ் 32%, நிதிஷ் குமார் 30% சதவீதம் பெற்றிருந்தனர். இந்த கருத்து கணிப்பானது மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவை, மேலும் குஷியாக்கியது. பீகாருக்கு "மிக இளம் வயதில் முதலமைச்சர்" கிடைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

மிக இளம் வயதில் முதலமைச்சர்

ஆனால், இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையவில்லை. ஆரம்பத்திலிருந்தே தேர்தல் முடிவுகள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) சாதகமாக வரத்துவங்கின.. ஒருகட்டத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் NDA கூட்டணி சுமார் 193 இடங்கள் என்ற வலுவான நிலைமைக்கு வந்துவிட்டது,.

இதனால் ராகவபூர் தொகுதியில் போட்டியிட்ட தேஜஸ்வி யாதவ், கிட்டத்தட்ட 1200 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்ததும், இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ்குமார் யாதவ் முன்னிலை பெற்றிருந்ததும், பெரும் சோர்வை கட்சிக்கு இப்போதே தர துவங்கிவிட்டது.

கடந்த 2020 மாநில தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஆர்ஜேடிக்கு, இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.. அதுமட்டுமல்ல, பீகார் தேர்தலில் RJD பெறும் இரண்டாவது மோசமான தோல்வி இதுவாகவே இருக்க போகிறது..

இந்த நேரத்தில் கடந்த 2005 சட்டமன்றத் தேர்தலை சற்று பின்னோக்கி பார்க்க வேண்டியிருக்கிறது.

லாலு கட்சி பெற்ற தோல்வி

அப்போதைய தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 215 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.. ஐக்கிய ஜனதா தளம் 55 இடங்களையும், பாஜக 37 இடங்களையும், காங்கிரஸ் வெறும் 10 இடங்களையும் அப்போது பெற்றிருந்தன. இதனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

எனினும், அதே வருடம் மீண்டும் தேர்தல் நடந்தது, நிதிஷ் குமார், பாஜக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அதில், ஐக்கிய ஜனதா தளம் 88 இடங்களையும், பாஜக 55 இடங்களையும் பெற்று ஆட்சியில் அமர்ந்தன.

அந்த நேரத்தில், தேஜஸ்வி யாதவின் தாயார் ராப்ரி தேவி முதல்வராக இருந்தபோதும், அரசியல் வியூகம் எதுவுமே எடுபடவில்லை. இந்த தேர்தல்தான் லல்லு பிரசாத்தின் அரசியல் மங்க தொடங்கியது.. நிதிஷ்குமாரின் ஆட்சி ஒளிர தொடங்கியது..

தேஜஸ்வி யாதவ்

கடந்த 2010ம் ஆண்டு தேர்தலிலும் ஆர்ஜேடியின் மோசமான தோல்வி ஏற்பட்டது, அதாவது வெறும் 22 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. அந்தவகையில், கடந்த 2005ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை நிதிஷ் குமார்தான் பீகார் அரசியலின் முக்கிய சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறார்.

இதற்கு நடுவில் உடல்நிலை காரணமாக லாலு ஒதுங்கி கொள்ள, தேஜஸ்வி யாதவ் தீவிர பொறுப்பை மேற்கொண்டும், ராகுல் காந்தியும் பக்க பலமாக துணை நின்றும், எதுவுமே கைகூடவில்லை.. கடந்த 2005ல் தன்னுடைய தாயிடமிருந்து ஆட்சியை பறித்த நிதிஷ்குமாரை தோற்கடித்து, மீண்டும் ஆட்சியை தேஜஸ்வி எப்படியாவது கைப்பற்றிவிடுவார் என்ற எதிர்பார்ப்பும் இன்று பொய்த்து போய்விட்டது.

கனவு கோட்டை தகர்ந்தது

தேஜஸ்வி யாதவின் "மிக இளம் வயது முதலமைச்சர்" கனவு கோட்டை துவக்கத்திலேயே தகர்ந்துவிட்டது.

கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம், 2வது இடத்தை பிடித்துவிட்டது. அத்துடன் இதுவரை அடைந்திடாத மிகப்பெரிய தோல்வியும் சந்தித்துள்ளது..

இது அந்த கட்சிக்கு மிகப்பெரிய ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது அதைவிட முக்கியமாக அந்த கட்சியின் தலைவராக உள்ள தேஜஸ்வி யாதவுக்கு மிகப்பெரும் பிரச்சனையை கொடுக்கும் வகையிலான முடிவாக இது பார்க்கப்படுகிறது

அதேசமயம், 20 வருடங்களுக்கு பிறகு, அதிலும் நிதிஷ் குமாரின் பல தோல்விகளுக்குப் பிறகு, பாஜகவும் ஜேடியுவும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது மற்றொரு பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

வலுவான சக்தி நிதிஷ் குமார்

கடந்த காலங்களில் கூட்டணிகளுக்கு நிதிஷ்குமார் மாறியிருந்தாலும், பெரிய வெற்றியை தரக்கூடிய இடத்தில் இன்னமும் அவர் உள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, எவ்வளவுதான் குழப்பத்தை உண்டுபண்ணாலும், எவ்வளவுதான் விமர்சனத்துக்கு ஆளானாலும், சில செய்கைகள் கேலியாக சித்தரிக்கப்பட்டாலும்கூட, ஒரு வலுவான சக்தியாக தன்னை தொடர்ந்து நிரூபித்து கொண்டிருக்கிறார் நிதிஷ்குமார்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+