• search
பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ரூட்" மாறிய சப்னா.. ரொம்ப பிடிவாதம்.. சொல்லி பார்த்தும் திருந்தலை.. அதிர்ந்த கணவர்.. ஷாக் முடிவு!

Google Oneindia Tamil News

பாட்னா: எவ்வளவோ சொல்லியும் மனைவி கேட்காததாலும், பிடிவாதமாக இருந்ததாலும்தான், மனதை கல்லாக்கி கொண்டு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் அன்பு கணவன்..!

தான் திருமணம் செய்யும் கணவனோ, மனைவியோ தனக்கு மட்டுமே சொந்தம் என்ற உணர்வு இருப்பதாலேயே ஏராளமான குடும்பம் இன்னமும் பிளவுபடாமல் ஒன்றாக இருந்து வருகிறது. இதில் ஒருசில குடும்பங்களும் விதிவிலக்காகி விடுகின்றன.

அப்படித்தான் ஒருவர் சிக்கிவிட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.. இவர் பெயர் உத்தம் மண்டல்... மனைவி பெயர் சப்னா குமாரி.. இவர்களுக்கு கல்யாணமாகி 7 வருஷமாகிறது.

"பாஜக"வை கதற விட்டுட்டாரோ பிகே.. "இரவல் மூளை"தான்.. அதிமுகவையும், ஆடிப் போக வைத்து.. சக்ஸஸ் போல்கள்!

சந்தோஷம்

சந்தோஷம்

இந்த 7 வருஷமும் இருவருமே சந்தோஷமாகத்தான் இருந்தனர்.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால், திடீரென சப்னாவுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை.. கணவரின் சொந்தக்காரர் ராஜு குமார் என்பவர் மீது காதல் வந்துவிட்டது.. இந்த காதல் ரொம்ப டீப் ஆக போய்விட்டது.. விஷயம் கணவனுக்கு தெரிந்து ஆடிப்போய்விட்டார்.

 தடுமாற்றம்

தடுமாற்றம்

இதைபற்றி சப்னாவிடமே கேட்டுவிட்டார்.. "நாம நல்லாதானே வாழ்ந்துட்டு இருக்கோம்.. ஏன் உன் புத்தி தடுமாறுது" என்று கேட்டுள்ளார்.. அதற்கு சப்னா, "நான் என்ன செய்யட்டும்? எனக்கு அவரை ரொம்ப பிடிச்சு போச்சு.. அவர்தான் எனக்கு வேண்டும்.. 7 வருஷம் எப்படியோ போயிடுச்சு, அதை மறந்துடுங்க.. எனக்கு ராஜுவை கல்யாணம் செய்து வெச்சுடுங்க".. என்றார். இதை கேட்டதும் கணவனுக்கு தலையே சுற்றிவிட்டது.

சப்னா

சப்னா

"2 குழந்தைங்ககூட இருக்காங்களே, இப்போ வந்து இப்படி சொல்றியே" என்றார்.. அதற்கு சப்னம், "மிச்சம் இருக்கிற வாழ்க்கையை அவர்கூட சந்தோஷமா வாழணும்.. இனி எனக்கு ராஜுதான் எல்லாமே" என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார்.. எவ்வளவோ சொல்லியும் சப்னா தன் முடிவை மாற்றிக் கொள்ளவே இல்லை.. மறுமணம் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால், வேறு வழியில்லாமல், சப்னாவுக்கு ராஜுவையே கல்யாணம் செய்துவைக்க கணவன் முடிவு செய்தார்.

 கல்யாணம்

கல்யாணம்

இதற்காக ஒரு கோவிலில் கல்யாணத்துக்கு ஏற்பாடும் செய்தார்.. உறவினர்களை எல்லாம் சமாதானப்படுத்தி வரவழைத்தார்.. அந்த கோவிலில் மனைவிக்கும், ராஜுவுக்கும் கணவனே தாலி எடுத்து கொடுத்து கல்யாணம் செய்து வைத்தார்.. தாலி கட்டியதுமே, சப்னா டக்கென் கணவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. அப்போது தன்னையும் அறியாமல் கதறி கதறி அழுதார் கணவன் மண்டல்... இவரை பார்த்ததும் அங்கிருந்தோரும் கண்கலங்கிவிட்டனர்.

அன்பு

அன்பு

திருமணம் என்பது வாழ்க்கையில் யாருக்குமே மறக்க முடியாத பந்தம்தான்.. இரு மனங்கள் இணைந்தால் மட்டுமே அது திருமணமா? அல்லது ஊர் அறிய தாலி கட்டிவிட்டால் மட்டுமே அது திருமணமா? என்ற குழப்பம் இன்னமும் நாட்டில் நிலவுகிறது.. எனினும் அனைத்து சமூக நிர்பந்தங்களையும் சுக்குநூறாக உடைத்தெறிந்து விடுகிறது இந்த "அன்பு".. அப்படித்தான் சப்னாவின் "முன்னாள்" கணவன் உத்தம் மண்டல் உயர்ந்து நிற்கிறார்.

English summary
Viral News: Bihar Man marries wife to her lover
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X