மெகா ட்விஸ்ட்! மீண்டும் நிதிஷ் உடன் கூட்டணி? வந்து விழுந்த கேள்வி.. லாலு பிரசாத் சொன்ன பதிலை பாருங்க
பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் தான் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருந்தார். இதற்கிடையே அங்குள்ள மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த மாதம் தான் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் ஐக்கியமாகினார். இதனால் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார்- லாலு பிரசாத் யாதவ் கூட்டணி முடிவுக்கு வந்தது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவராக அறியப்பட்ட நிதிஷ்குமார் திடீரென அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தது பெரும் பேசுபொருள் ஆனது. இது பீகார் அரசியலைத் தாண்டி தேசியளவில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு விழுந்த மிகப் பெரிய அடியாகவே பார்க்கப்பட்டது.
சொன்ன பதில்: இனிமேல் நிதிஷ்குமார்- லாலு பிரசாத் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிட்டனர். ஆனால், அனைவருக்கும் ஷாக் தரும் வகையில் லாலு பிரசாத் இப்போது சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த லாலு பிரசாத், "அவர் வரும்போது, பார்ப்போம். அவருக்கான கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பீகார் சட்டசபையில் லாலு யாதவ்- நிதிஷ்குமார் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் லாலு பிரசாத் யாதவிடம் இருந்து இந்தக் கருத்துகள் வந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது, பீகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிதிஷ்குமார்- லாலு பிரசாத் ஆகியோர் கடந்த காலங்களில் பல முறை கூட்டணியை அமைத்துள்ளனர். முறித்தும் இருக்கிறார்கள்.
ஏன் முக்கியம்: இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறிய பிறகு இருவரும் சந்தித்துக் கொள்வது அதுவே முதல்முறையாகும். அந்த சந்திப்பைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவிடம் இருந்து இந்தக் கருத்துகள் வந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் இந்த விவகாரத்தில் நிதிஷ்குமார் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவே தெரிகிறது. அவர் நிதிஷ்குமாரை மிகக் கடுமையாகவே விமர்சித்து வருகிறார்.
பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதுவரை பீகாரில் ஜேடியு- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே இருந்தது. இருப்பினும், நிதிஷ்குமார் திடீரென அந்த கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் ஐக்கியமானார். கடந்த ஜன.28ஆம் தேதி காலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், அன்று மாலையே மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்தியில் பேச நிதிஷ்குமார் சொன்னாரு.. கூட்டணிக்காக அப்போ அமைதியா இருந்தோம்! உண்மை உடைத்த டிஆர் பாலு
நிதிஷ்குமார்: எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வலிமையான ஒன்றாக உருவாக்க முயன்றதாகவும் இருப்பினும் அதில் ஒத்துழைப்பு இல்லை எனக் கூறியிருந்தார். மேலும் அவர், "எங்கு இருந்து பிரிந்து சென்றேனோ.. மீண்டும் அதே இடத்திற்கு வந்துள்ளேன். மீண்டும் வேறு எங்கும் செல்ல வாய்ப்பே இல்லை" என்று அவர் கூறியிருந்தார். நிதிஷ்குமார் கூறியதை வைத்துப் பார்த்தால் அவர் மீண்டும் லாலு பிரசாத் உடன் கை கோர்க்க வாய்ப்பு இல்லை.
ஆனால், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கடலாம். அதிலும் கூட்டணி என்று வரும் போது நிதிஷ்குமார் சொல்வதையும் முழுமையாக நம்பிவிட முடியாது. எனவே, பீகார் அரசியலில் மற்றொரு பரபர மாற்றம் நடந்தாலும் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications