ஏமாற்றிய காதலனின் புது மனைவிக்கு.. ராத்திரியில் இளம் பெண் கொடுத்த ஷாக் தண்டனை
பாட்னா: ஏமாற்றிய காதலனின் புது மனைவிக்கு இளம் பெண் மோசமான தண்டனை கொடுத்துள்ளார். தலை முடியை வெட்டியதுடன், கண்ணில் பெவி குவிக் பசையை ஊற்றியுள்ளார். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம்ம ஊர் தொலைக்காட்சி சீரியல்களில் வரும் காட்சியைப் போல் ஏமாற்றிய காதலனின் மனைவிக்கு பீகார் பெண் கடுமையாக தண்டனை கொடுக்க விரும்பினார்.
மணப்பெண் தோழி போல் நடித்து, நள்ளிரவி தூங்கும் போது யாருக்கும் தெரியாமல் எழுந்து சென்று அந்த பெண்ணுக்கு கொடுத்த தண்டனை தான் பீகாரில் பேசுபொருளாக உள்ளது.

ஏமாற்றம்
பீகாரின் நாளந்தா மாவட்டம் மோரா தலப் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் கோபால் ராம் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த இளம்பெண் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விரும்பியுள்ளார். அவரையே திருமணம் செய்வதாகக் கூறி பழகிய கோபால் திடீரென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் நிச்சயம் செய்ய முடிவு செய்தார். இதனால் மீரா காதலன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

உறவினர்கள்
இந்நிலையில் செவ்வாய்கிழாமை அன்று ஷேக்புரா கிராமத்தில் கோபாலுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையுடன் மனைவி மற்றும் உறவினர்களுடன் கோபால் தனது வீட்டிற்குத் திரும்பிவிட்டனர், அதேசமயம் காதலியான அந்த இளம்பெண் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், கோபால் சகோதரியின் தோழி என்ற பழக்கத்தில் கோபாலின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

பெவி கிவிக்
அதனால் உறவினர்கள் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. உறவினர்கள் அனைவரும் அசதியில் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ரகசியமாக படுக்கையறைக்குள் நுழைந்த அந்தப் பெண், புது மணப்பெண்ணின் தலைமுடியைத் துண்டித்துள்ளார். அத்துடன் அவரது கண்ணில் ‘பெவி கிவிக்' என்னும் சக்தி வாய்ந்த ஒட்டும் பசையினையும் ஊற்றியுள்ளார். வலியினால் அலறித்துடித்தார் புத மணப்பெண்.

பார்வை பறிபோகும்
அவரது கதறல் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் தப்பமுயன்ற அங்கு நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓட முயன்ற மீராவை மடக்கிப் பிடித்தனர். அவரை நன்றாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கபபட்ட புது மணப்பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications