அது போன வருசம்.. பாஜகவுடன் சேர்வதை விட உயிரை விடுவதே மேல் என கூறிய நிதிஷ்.. ட்ரெண்டாகும் வீடியோ!
பாட்னா: ஜேடியு தலைவர் நிதிஷ் குமார், கடந்த முறை பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டபிறகு, பாஜகவுடன் கூட்டு சேர்வதை விட உயிரை விடுவதே மேல் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் பாஜகவுடன் இணைந்துள்ளதையடுத்து, அவர் முன்பு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கூட்டணியில் ஏற்பட்ட உரசல் காரணமாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார். சில நிபந்தனைகளுடன் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக ஒப்புகொண்ட நிலையில், தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார் நிதிஷ் குமார்.

கூட்டணியை முறித்த நிதிஷ்: தொடர்ந்து, பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ் குமார். பாஜக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளார் நிதிஷ் குமார். 243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகாரில், பாஜக மற்றும் தனது ஜேடியூ கட்சி எம்.எல்.ஏக்கள் என 128 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளார் நிதிஷ் குமார். அடுத்த சில மணி நேரத்தில், பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் நிதிஷ் குமார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், பாஜவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும், ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சியில் முதல்வர் பதவி நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. பின்னர் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக தனது கட்சியை உடைக்க திட்டம் தீட்டுகிறது என குற்றம்சாட்டி, கடந்த 2022ஆம் ஆண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு, ஆர்ஜேடியுடன் இணைந்து புதிதாக ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார்.
உயிரை விடுவதே மேல்: அப்போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாரதிய ஜனதா கட்சியுடன் எனது வாழ்நாளில் மீண்டும் கூட்டணி வைக்கமாட்டேன் என்று தெரிவித்தார். சாகும் வரை இனி பாஜகவுடன் கைகோர்க்க மாட்டேன், ஆனால் பாஜகவுடன் கூட்டணி சேர்வதை விட உயிரை விடுவதே மேல் என்று நிதிஷ் குமார் கூறினார். மேலும், தனக்கு முதல்வர் ஆகும் எண்ணம் இருந்ததில்லை என்றும், பாஜக தான் தன்னை வலுக்கட்டாயமாக முதல்வராக்கியது, இப்போது கட்சியையே உடைக்க நினைக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
माननीय @NitishKumar जी हम सब चाहते हैं कि आपकी लम्बी उम्र हो,आप देश के बड़े नेता है,
— Rajeev Rai (@RajeevRai) January 27, 2024
आप से हम सबको उम्मीद है कि भाजपा के खिलाफ आपने प्रतिज्ञा किया था उसको हम सब मिलकर पूरा करेंगे,
INDIA गठबंधन के जनक है आप , अगर फिर पलटी मारेंगे तो जनता क्या सोचेगी ?😞@Jduonline pic.twitter.com/j76gz4qraZ
இந்நிலையில் தான் அடுத்த ஒரே ஆண்டில் பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் நிதிஷ் குமார். எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள வலுவான இந்தியா கூட்டணி அமைய நிதிஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார். பிரதமர் வேட்பாளராக தான் களமிறங்க விரும்பிய நிலையில் அதற்கு 'இந்தியா' கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க மறுத்த நிதிஷ் அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்த நிதிஷ் குமார், ஆர்ஜேடி உடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டு மீண்டும் பாஜவுடன் இணைந்துள்ளார். பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ஆர்ஜேடி + காங்கிரஸ் ஆதரவுடன் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார், ஒரே ஆண்டில், தற்போது அந்தக் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக ஆதரவை நாடியுள்ளார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில், நிதிஷ் குமார் சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பலி ஆகியுள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்து விலகியபோது, பாஜகவுடன் கூட்டணி சேர்வதை விட உயிரை விடுவதே மேல் என்று நிதிஷ் குமார் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
"நிதீஷ் குமார் சார், நீங்கள் நாட்டின் தலைசிறந்த தலைவராக நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். இந்தியா கூட்டணியின் தந்தை நீங்கள்தான், நீங்கள் மீண்டும் பாஜக பக்கம் திரும்பினால் பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்?" என சமாஜ்வாடி தலைவர் ராஜீவ் ராய், நிதிஷ் குமாரின் பழைய வீடியோவைப் பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஏராளமானோரும் இந்த வீடியோவை பகிர்ந்து நிதிஷ் குமாரை விமர்சித்துள்ளனர்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications