பெரம்பலூர் மகிழ்ச்சி.. திருச்சி அரசு பஸ்ஸில் மதீனாவுக்கு ஆச்சரியம்! யாரந்த டிரைவர், கண்டக்டர்? சபாஷ்
பெரம்பலூர்: நேர்மையானவர்களுக்கு என்றென்றுமே இந்த சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தும், அங்கீகாரமும், பாராட்டுக்களும் கிடைத்து வருவதை மறுக்க முடியாது..
இதோ திருச்சியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது பாருங்கள். அதுவும் திருச்சியில் அரசுபேருந்தில் நடந்த இந்த சம்பவம் இணையத்திலும் பாராட்டை பெற்று வருகிறது.

அரசு பஸ்: கடந்த சனிக்கிழமையன்று, சென்னை மாதவரத்தில் இருந்து, பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு அரசு பஸ் கிளம்பி சென்றுள்ளது.. திருச்சி உறையூரை சோ்ந்த எஸ். ரமேஷ் என்ற டிரைவரும், திருச்சி காட்டூரை சோ்ந்த ஆா். கோபாலன் என்ற கண்டக்டரும், இந்த பஸ்ஸை இயக்கி வந்தனர்.
இதே பஸ்ஸில், பெரம்பலூா் வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகரை சோ்ந்த ச. மதீனா என்பவா், தன்னுடைய அம்மா, பாட்டியுடன் சென்னை மாதவரத்தில் ஏறினார்.. இவர் தன்னுடன், தங்கம், வெள்ளி நகைகளை கொண்ட துணிப்பை ஒன்றை கொண்டு வந்திருந்தார். ஆனால், பெரம்பலூர் வந்ததுமே, இந்த நகைப்பையை பஸ்ஸிலேயே மறந்து வைத்துவிட்டு கீழே இறங்கிவிட்டாா்.
பணிமனை : மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, திருச்சி கன்டோண்மென்ட் போக்குவரத்து பணிமனைக்கு பஸ் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.. அப்போதுதான், பஸ் சீட்டின் மீது துணிப்பை இருந்ததை கண்டக்டரும், டிரைவரும் பார்த்துள்ளனர்.. உடனே அந்த பையை சோதனையிட்டபோது, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.. உடனே அதனை கொண்டுபோய் பணிமனை பாதுகாவலரிடம் இருவருமே ஒப்படைத்தனா்.
இதற்கு நடுவில், நகைப்பையை தவறவிட்ட மதீனா, மறுபடியும் திருச்சி பணிமனைக்கு வந்தாா்.. அப்போது, நகைப்பையை தவறவிட்டது குறித்து பணிமனையில் விசாரித்திருக்கிறார்.. இதையடுத்து, அவரிடம் உரிய விசாரணை நடத்தி, நகைப்பையை கண்டக்டர் ரமேஷ், டிரைவர் கோபாலன் இருவரும் ஒப்படைத்தனர்.
வெள்ளி நகைகள்: அந்த பையில் மொத்தம் 81.150 கிராம் தங்க மற்றும் 149.100 கிராம் வெள்ளி நகைகள் இருந்ததாம்.. கிட்டத்தட்ட 10 பவுன் தங்க நகைகளாகும்.. இந்த நகைப்பையை பாதுகாப்பாக எடுத்து வைத்து ஒப்படைத்த கண்டக்டர், டிரைவருக்கு, மதீனா மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெரம்பலூரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications