திமுக எம்.பியின் அண்ணனால் தீக்குளிக்க குடும்பமே முயன்றதாக வீடியோ.. அண்ணாமலை வெளியிட்டார்
அண்ணாமலை, ஒரு வீடியோவை வெளியிட்டு திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெரம்பலூர் : திமுக எம்.பி ஆ.ராசாவின் அண்ணன் தங்களது சொத்துகளை அபகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரும் அங்கே இருந்த பத்திரிகையாளர்களும் துரிதமாகச் செயல்பட்டு, தீக்குளிக்க முயன்றவர்களை மீட்டுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோவை பதிவிட்டு, கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

ஆ.ராசாவின் அண்ணன்
திமுக துணை பொதுச் செயலாளராகவும், நீலகிரி எம்.பியாகவும் இருந்து வருபவர் ஆ.ராசா. இவரது அண்ணன், பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் அங்கு சலவை தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளை அபகரிக்க முயற்சி செய்து வருவதாக புகார் கிளம்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளிக்க முயற்சி
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆ.ராசாவின் சகோதரர் தங்கள் நிலத்தை அபகரிப்பதாகவும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, மண்ணெண்ணெயை தங்கள் உடலில் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றனர். போலீசாரும் அங்கே இருந்த பத்திரிகையாளர்களும் துரிதமாகச் செயல்பட்டு, தீக்குளிக்க முயன்ற குடும்பத்தை மீட்டுள்ளனர்.

நியாயம் கிடைக்கவில்லை
தாங்கள் சலவைத் தொழிலாளிகள் என்றும், ஆ.ராசாவின் சகோதரர் தங்களின் நிலத்தை பறித்துக் கொண்டு விட்டார் என்றும் அதனால் வழக்கறிஞர்களை நாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முயன்ற நிலையில், வழக்கறிஞர்களையும் வளைத்து போட்டுக் கொள்கிறார் ஆ.ராசாவின் சகோதரர் என்றும் இதனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் அழுது புலம்பியுள்ளனர் அந்த குடும்பத்தினர்.

அண்ணாமலை கண்டனம்
இது தொடர்பான வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக என்றாலே தமிழ்நாட்டில் ஊழல் - ரவுடியிசம் தான் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?











Click it and Unblock the Notifications