"இசை முரசு" நாகூர் அனிபாவின் நூற்றாண்டு விழாவில் புத்தகம் வெளியீடு!
பெரம்பலூர்: பெரம்பலூரில் நாகூர் அனிபா நூற்றாண்டு விழா மற்றும் கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பிரதியை சட்டசபை உறுப்பினர் அப்துல் சமது வெளியிட, பெரம்பலூர் தொழிலதிபர் எஸ் எஸ் நிறுவனத்தின் தலைவர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
அரும்பாவூர் இலக்கிய சாரல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி, கருத்தரங்கு, கவியரங்கம் மற்றும் ஆய்வரங்கம் என மூன்று நிகழ்வுகளாக நடந்தன.

முதல் நிகழ்ச்சியாக, நாகூர் அனிபா குறித்த கருத்தரங்கு பேராசிரியர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் கி.மகேந்திரன், எழுத்தாளர் வி.களத்தூர் கமால் பாஷா, பேராசிரியர் ஞானசேகரன் பேராசிரியர் மூர்த்தி, ஆசிரியர் சிலம்பரசன், கவிஞர் ச.மோகன், சனா பாருக் ஆகியோர் உரையாற்றினர்.
இரண்டாம் அமர்வாக, நாகூர் அனிபா குறித்த கவியரங்கம் நடைபெற்றது. இந்த கவியரங்கம் கவிஞர் அகவி தலைமையில் நடைபெற்றது. கவிஞர் இளங்குமரன், கவிஞர் நிழலி, கவிஞர் முத்துமாறன், கவிஞர் இராமர், செந்தமிழ் வேந்தன் ஆகியோர் நாகூர் அனிபாவின் பாடல்களில் இஸ்லாம், அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கவி பாடினர்.
அடுத்ததாக, அரும்பாவூர் சமூக ஆர்வலர் தாகிர் பாஷா எழுதிய "வாழத் தகுதியற்ற நகரத்தின் தடங்கள்" என்ற தலைப்பிலான கவிதை நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை சட்டசபை உறுப்பினர் அப்துல் சமது வெளியிட, பெரம்பலூர் தொழிலதிபர் எஸ் எஸ் நிறுவனத்தின் தலைவர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
நூல் குறித்து எழுத்தாளர் ஸ்ரீமதி, எழுத்தாளர் செயபால் ரத்தினம், பெரம்பலூர் இரா.எட்வின் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்நிகழ்விற்கு பேராசிரியர் தமிழ்மாறன் தலைமை வகித்தார் நிகழ்ச்சியின் இறுதியில் நூல் குறித்தும் அதனுடைய தாக்கம் குறித்தும் சட்டசபை உறுப்பினர் அப்துல் சமது விரிவாக பேசினார்.
நூல் ஆசிரியர் அரும்பாவூர் தாஹிர் பாஷா ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை சாஹிரா தாஹிர் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியானது செந்தில்குமார் நன்றியுரையுடன் நிறைவுற்றது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications