திமுக கூட்டணியிலிருந்து வெளியே வாங்க திருமாவளவன்! BJP-ல்தான் சமூகநீதி இருக்கிறது-நயினார் நாகேந்திரன்
பெரம்பலூர்: "திமுகவில் சமூகநீதி இல்லை. பாஜகவில்தான் சமூகநீதி இருக்கிறது. திருமாவளவன் இன்னும் எதற்காக திமுக கூட்டணியில் தொடர்கிறார். கூட்டணியிலிருந்து வெளியே வாருங்கள்" என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.
பெரம்பலூரில் அவர் பேசியதாவது, "தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தானாக உருவாகிய கூட்டணி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்திற்கு வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி இருக்கக் கூடாது என்று இந்த கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். இது நயினார் நாகேந்திரன் உருவாக்கிய கூட்டணி கிடையாது. மேல்மட்ட அளவில் இயற்கையாக உருவாகிய கூட்டணி இது.

ஆனால் திருமாவளவன் சொல்கிறார், இது விரும்பத்தகாத கூட்டணி என்று. நான் கேட்கிறேன், திமுக கூட்டணியில் இருக்கிறீர்களே! திமுக கூட்டணியில் சமூகநீதி எங்கிருக்கிருக்கிறது? வேங்கைவயல் பிரச்சனை என்ன ஆச்சு? திருமாவளவனால் சொல்ல முடியுமா? செல்வப்பெருந்தகையால் திமுக கூட்டணி சமூகநீதி கூட்டணி என்று சொல்ல முடியுமா? கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. அதை திறக்கும் விழாவுக்கு செல்வப்பெருந்தகை அழைக்கப்படவில்லை.
சமூகநீதி திமுக கூட்டணியில் இருக்கிறதா? கிடையாது. பிறகு ஏன் அந்த கூட்டணியில் இருக்கிறீர்கள்? வெளியே வரவேண்டியதுதானே! பாஜகவில்தான் சமூகநீதி இருக்கிறது. இந்தியாவின் ஜனாதிபதியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முர்மு அவர்கள் இருக்கிறார்கள். அப்துல்கலாமை ஜனாதிபதியாக ஆக்கிக்காட்டிய கட்சி பாஜகதான். எங்களுக்குள் பேதம் கிடையாது. இந்து, இஸ்லாம் என்கிற பிரிவு, பாகுபாடு கிடையாது. ஆனால் அதையெல்லம் உருவாக்குபவர்கள் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. லாக்கப் மரணங்கள் நடந்திருக்கின்றன. 24 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. ஆனால் 24வது மரணத்திற்கு மட்டும்தான் முதல்வர் சாரி சொல்கிறார்" என்று பேசியிருக்கிறார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications