ரூ.118 கோடி செலவு! 1200 பேரைப் பைசா செலவில்லாமல் பட்டதாரிகளாக்கிய பாரிவேந்தர் எம்.பி!
பெரம்பலூர்: ஒரு வருடத்திற்கு 300 மாணவர்கள் வீதம், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1200 பேரை ஒரு பைசா செலவில்லாமல் படிக்க வைத்து பட்டதாரிகளாக மாற்றி இருக்கிறார் பாரிவேந்தர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட போது, ஆண்டுக்கு 300 பேரைப் பைசா செலவில்லாமல் படிக்கவைத்து பட்டதாரி ஆக்குவேன் என்று பாரிவேந்தர் வாக்குறுதி அளித்திருந்தார்.

இப்படி அவர் தேர்தல் நேரத்தில் அறிவித்த போது, பலரும் இதை எங்கே செய்யப் போகிறார்? இது எல்லாம் நடக்கின்ற காரியமா? பொய்யான வாக்குறுதிகளைத் தருகிறார் என்று எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியுமா? என ஏங்கித் தவித்த ஏழைப் பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றித் தந்ததுடன், தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளார் பாரிவேந்தர் எம்.பி.
சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! இதுதான் உண்மை!
இந்தத் தைரியத்தில்தான் பெரிய கட்சித் தலைவர்களே ஒவ்வொரு தேர்தலின் போதும் தொகுதி மாறி மாறி போட்டியிடும் இந்தக் காலத்தில் 2வது முறையாகப் பெரம்பலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிருக்கிறார் இவர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இவர் 62.45% வாக்குகளை இவர் பெற்றிருந்தார். அதற்கு முன்னதாக 2014 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் 45.40% வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். இவருடன் ஒப்பிடும் போது பாரிவேந்தர் பெற்ற வாக்குச் சதவீதம் மிகமிக அதிகம்.
இதை ஏன் சொல்கிறோம் என்றால், 2009இல் திரைப்பட நடிகர் நெப்போலியன் இதே பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். அவர் 48.08% வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். இவருக்குத் திரைப்பட நடிகர் என்ற புகழ் வெளிச்சம் இருந்தது. அப்படி இருந்தும் இவரால், 48% வாக்குகளைத்தான் பெற முடிந்தது.
ஆனால், பாரிவேந்தருக்கு அந்தத் திரைத்துறை வெளிச்சம் இல்லை. அவரது அடையாளம் கல்வித் தந்தை. கல்வியாளரான இவர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வென்று காட்டினார்.

இதற்குக் காரணம், இந்தத் தொகுதியில் ஐஜேகே தொண்டர்களின் வாக்கு வங்கி அதிகம். ஆகவேதான் அவரால் 62 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற முடிந்தது. 4 லட்சத்திற்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் பெரம்பலூர் தொகுதி வாக்காளர்கள் இவரை வெற்றி பெற வைத்தனர்.
பெரம்பலூர் தொகுதியை பொறுத்தளவில் இந்த முறை இவருக்குப் பெரிய எதிர்ப்புகள் இல்லை. ஏனெனில் இவர் மீது ஊழல் புகார்கள் இல்லை. தொகுதியை நிதியில் கைவைத்து விட்டார் என யாரும் சொல்ல முடியாது.
பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை ஆட்டையைப் போடும் அரசியல்வாதிகளே அதிகம். அதற்கு மாறாக இவர் தனது நிறுவனத்திலிருந்து கோடிக் கணக்கான ரூபாயை இவர், தொகுதிக்காகச் செலவு செய்துள்ளார் என்பதுதான் ஹைலைட்.
பெரம்பலூர் தொகுதியிலுள்ள ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களை ஒத்த பைசா செலவில்லாமல் உயர்கல்வி படிக்க வைப்பேன் என்று கடந்த முறை அளித்த வாக்குறுதியை இவர் 100% முழுமையாக நிறைவேற்றி உள்ளார்.
அதன்படி ஆண்டுக்கு 300 மாணவர்கள் வீதம், கடந்த 4 வருடங்களில் மட்டும் 1200 மாணவர்களை பத்து பைசா வாங்காமல் உயர்கல்வி படிக்க வைத்து பட்டம் பெறச் செய்துள்ளார்.
இதற்காக இவரது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் செலவு செய்துள்ள நிதி எவ்வளவு தெரியுமா? ரூ.118 கோடிக்கு மேல். சரியாகச் சொன்னார் 118,77,51,400 ரூபாய்.

கல்விக் கட்டணம் வாங்க மறுத்தது, படிப்புக்கான பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்கியது, தங்க வைத்து உணவு, இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது என 1200 மாணவர்களுக்கும் சேர்த்து இவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது.
இவர்கள் படித்தது ஏதோ சாதாரண படிப்பு அல்ல; பி.டெக் தொடங்கி பி.இ., வரை, அக்ரி தொடங்கி ஆர்ட் அண்டு சையின்ஸ் வரை எனப் பல மாணவர்கள் இவர் செய்த உதவியால் உயர்கல்வி பயின்றுள்ளனர். அதில் சிலர் தற்போது வேலைக்கே சென்று சம்பாதிக்கத் தொடங்கி உள்ளனர்.

தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்?
"ஒருவரைப் படிக்க வைப்பதே பெரிய கஷ்டம். இவர் ஆண்டுக்கு 300 பேரைப் படிக்க வைத்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் தொகுதியில் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெறும் பசங்களையும், படிக்க வைக்கவே முடியாது எனப் பெற்றோர்களே கைவிரித்த குழந்தைகளையும் பாரிவேந்தர் படிக்க வைக்க உதவி இருக்கிறார்" என்கிறார் பெரம்பலூர் தொகுதி இல்லத்தரசி அனுசுயா.
"தேர்தலில் நிற்கும்போதே, ஏழை பிள்ளைகளைப் படிக்கவைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். நானும் எனது நண்பர்களும் படித்து முடிந்ததும் மனு எழுதிப் போட்டோம்.

உடனே எங்களை தேர்வு எழுத அழைத்தார். அந்தத் தேர்வில் வெற்றி பெற்றதும் முழு செலவையும் ஏற்று எங்களைப் படிக்க வைத்தார். என்னைப் பொறுத்த வரை கொடுத்த வாக்குறுதியை பாரிவேந்தர் காப்பாற்றி இருக்கிறார்" என்கிறார் மாணவி மதினா.
"நான் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு படிக்கிறேன். நான் ஒரு காலத்தில் கல்லூரிக்குப் போக முடியுமா? என்னால் உயர்கல்வி பெற முடியுமா? என்ற சந்தேகத்தில் இருந்தேன்.
ஏனென்றால், வீட்டில் வசதி கிடையாது. அப்பா, அம்மா இரண்டு பேருமே விவசாயிகள். பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. நான் +2வில் நல்ல மதிப்பெண் எடுத்தேன்.
அப்போது தான் ஏழை மாணவர்களைச் சொந்த செலவில் படிக்க வைப்பேன் என்று பாரிவேந்தர் சொன்னார். உடனே அவரிடம் உதவிக் கேட்டேன். அவர் நான் படிப்பதற்கான எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். இப்போது வேதியியல் படித்து முடிக்கப் போகிறேன். அதற்கு அவரது உதவிதான் காரணம்.

என் எதிர்காலம் என்ன ஆகுமோ எனப் பயத்திலிருந்தேன். +2 வரை படித்தது வீணாகிவிடுமா என்று கூட நடுவில் ஒரு சந்தேகம் வந்தது. அதை உடைத்து கல்லூரிக்குக் கொண்டு வந்தவர் அய்யாதான். இன்றைக்கு 91% எடுத்து நல்ல மாணவி எனப் பெயரும் எடுத்துள்ளேன்" என்கிறார் மாணவி சிவரஞ்சினி.
"என் அப்பா பூச்சி மருந்து அடிக்கும் வேலை செய்கிறார். எங்கள் குடும்பமே வயல் காட்டை நம்பித்தான் உள்ளது. எங்கள் ஊர் க.எறையூர். இது பெரம்பலூர் தொகுதிக்குள்தான் இருக்கிறது. நான் படித்தது முழுக்க அரசாங்க பள்ளிக் கூடத்தில்தான்.
என்னைப் போன்ற பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த பெண், ஒரு ரூபாய் செலவில்லாமல் உயர்படிப்பை முடிக்க பாரிவேந்தர் தான் உதவி செய்தார். நான் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், கணினி அறிவியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன்.

கம்ப்யூட்டரை எல்லாம் என் தலைமுறையில் யாருமே கண்ணால் கூட பார்த்தது கிடையாது. அந்தக் குறையை போக்கியவர் அய்யாதான். அவருக்கு என் நன்றி" என்கிறார் மாணவி மகாலெட்சுமி.
பல மாணவிகளிடம் நாம் பேசினோம். அவர்கள் அனைவரும் ஒரு விசயத்தை அழுத்திச் சொன்னார்கள்.
அதாவது பெரம்பலூர் போன்ற ஒரு மாவட்டத்திலுள்ள அரசுக் கல்லூரியில் படிக்கவே வழியில்லாத இவர்களைப் போன்றவர்களைச் சர்வதேச மாணவர்களோடு இணையாக அமர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பை பாரிவேந்தர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அதைத்தான் திரும்பத் திரும்ப உணர்ச்சி பொங்கப் பலரும் சொன்னார்கள்.

எஸ்.ஆர்.எம். மாதிரியான வசதிகள் நிறைந்த ஒரு பல்கலைக்கழகம் என்பது இவர்களின் வாழ்நாள் கனவு என்றார்கள் பலர். அதை எளிதில் எட்டி விட முடியாது என்றும் அதற்கு ஏணியைப் போட்டுக் கொடுத்தவர் பாரிவேந்தர் தான் என்றும் பலன் பெற்ற பல மாணவிகள் மறக்காமல் சொன்னார்கள்.
கல்விதான் அழிக்க முடியாத செல்வம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது தமிழ் மறை. ஆகவே பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெற்றால், பல ஆயிரம் மாணவர்களின் கல்விக் கண் திறக்கப்படும் என்பது மட்டும் உறுதி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications