ராத்திரி 11 மணி.. கதற கதற.. பதற வைத்த இளம் பெண்.. விசாரித்து பார்த்தால்.. ஷாக்கான போலீஸ்!
பெரம்பலூர் பெண் அளித்த புகார் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது
பெரம்பலூர்: "ராத்திரி 11 மணிக்கு.. ஓடும் காரில் என்னை கதற கதற பலாத்காரம் செய்துவிட்டார்கள்" என்று இளம்பெண் அழுதுகொண்டே புகாரும் தந்ததை கண்டு போலீசார் சற்று அதிர்ந்துதான் போனார்கள்! ஆனால் மேட்டரே வேற!
பெரம்பலூரை சேர்ந்தவர் அருண்.. இவருக்கு 28 வயதாகிறது.. டிரைவர் வேலை பார்க்கிறார்.. சம்பவத்தன்று 27 வயதுடைய பெண் ஒருவரை சந்தித்து, கடன் தருவதாக கூறி அழைத்து சென்று அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

நடந்ததை வெளியே சொன்னால், அந்த பெண்ணையும், குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதையடுத்து அந்த பெண் பெரம்பலூர் மகளிர் போலீசில் புகார் தரவும், டிரைவர் அருணை போலீசாரும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் கடந்த வாரத்தில் நடந்துள்ளது.. ஆனால், நடந்த சமாச்சாரமே வேறு என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.. சம்பவத்தன்று ராத்திரி 11 மணிக்கு, பாதிக்கப்பட்ட பெண் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார்.. அப்போதுதான், தன்னை நாலு பேர் காரில் கடத்தி, பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் தந்திருக்கிறார்.. இதனால் அதிர்ந்து போன போலீஸ் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கும்போதுதான், அவர் மாற்றி மாற்றி பேசியது தெரியவந்துள்ளது.
அதன்பிறகு தங்கள் பாணியில் விசாரணை நடத்தும்போதுதான் விஷயம் வெளியே வந்தது.. 'அந்த பெண்ணின் கணவர், கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகிறாராம்.. கணவன் வெளியூரில் இருந்ததால், இந்த பெண் அருணுடன் நெருக்கமாகவே பழகி வந்துள்ளார்.. கேட்க ஆளின்றி ஊர் ஊராக சுற்றியும் வந்திருக்கிறார்கள்.. சம்பவத்தன்று இரவும் வெளியூர் போய் சுற்றிவிட்டு, ராத்திரி ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது மணி 10 ஆகிவிட்டது.. அந்த நேரம் பார்த்து கணவன் போன் செய்திருக்கிறார்.
அடுத்தடுத்து போன் வந்து கொண்டே இருக்கவும், போனை எடுக்காமல் விட்டாலும் விபரீதம் ஆகிவிடும் என்பதால், கணவனை சமாளிக்க திடீரென பலாத்காரம் நாடகம் ஆடியுள்ளார்.. தன்னை காரில் யாரோ கடத்தி பலாத்காரம் செய்கிறார்கள் என்று சொன்னதுடன், ஒருபடி மேலே போய், அதை நம்பவைப்பதற்காக அந்த ராத்திரி நேரத்தில் ஸ்டேஷனுக்கே வந்து, டிரைவர் மீது பொய் புகார் தந்ததும் தெரியவந்தது.. அந்த புகாரின்பேரில்தான் டிரைவரை உள்ளே தள்ளினார்களாம்.. இதையெல்லாம் கேட்டு போலீசாரே நொந்து கொண்டார்களாம்!


Click it and Unblock the Notifications
