அம்மா குளிக்கும் வீடியோ.. மகளுக்கு டார்ச்சர்.. பாத்ரூமில் வீடியோ எடுத்த இன்னொரு பெண்.. கஞ்சமலை ஷாக்
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இன்னொரு பெண் கைதானார்
பெரம்பலூர்: பெண் குளிப்பதை, ஒரு பெண்ணே திருட்டுத்தனமாக வீடியோ எடுத்துள்ளார்.. இந்த வீடியோவை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லையும் தரப்பட்டுள்ளது,.
பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் கஞ்சமலை.. இவருக்கு பெரியண்ணன் என்ற இன்னொரு பெயர் உண்டு.. இவரது மகன் செல்வன்.. 33 வயதாகிறது.. என்ஜினீயர் படித்துள்ளார்.
ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால், அந்த கிராமத்திலேயே எலக்ட்ரீசியனாகவும், பிளம்பராகவும் வேலை பார்த்து வருகிறார்.

செல்போன்
இந்நிலையில், 32 வயதுடைய பெண் ஒருவர் குளிப்பதை செல்வன் மறைந்திருந்து, செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. பின்னர் அந்த வீடியோவை, சம்பந்தப்பட்ட பெண்ணின் 15 வயது மகளுக்கு செல்போனுக்கு அனுப்பியதாகவும் தெரிகிறது. வீடியோ அனுப்பியதுடன், தன்னுடைய விருப்பத்துக்கு சிறுமி இணங்க வேண்டும் என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்..

குளியல் வீடியோ
அதுமட்டுமல்ல, தன் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், அவர் அம்மாவின் குளியல் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய அம்மாவிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் அம்மா, உடனடியாக இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகார் தெரிவித்தார்... அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில், போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்..

மலர்க்கொடி
அப்போதுதான், இந்த சம்பவத்தில் இன்னொரு பெண் உடந்தையாக இருப்பது தெரியவந்ததை அறிந்து போலீசார் அதிர்ந்து போனார்கள்.. அவர் பெயர் மலர்க்கொடி, 45 வயதாகிறது.. செல்வனுக்கு அக்கா உறவுமுறையாம்.. அதே ஊரை சேர்ந்தவர்தான். இவர்தான், அந்த பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து, அதை கொண்டு வந்து செல்வனிடம் தந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மலர்கொடியையும் போலீசார் கைது செய்தனர்...

ஆபாசம்
செல்வன், மலர்கொடி மீது போலீசார் போக்சோ, பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்... இவ்வளவு வேலை பார்த்த செல்வனுக்கு, ஏற்கனவே திருமணமாகி விட்டது.. ஒரு பெண் குழந்தையும் உள்ளது.. செல்வனின் அம்மா, வேலூர் ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினராகவும் உள்ளதுதான் இதில் ஹைலைட்டே..!
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications