உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.. சீமான் பேசும்போதே ஒலித்த குரல்.. என்ன ரியாக்சன் தெரியுமா? - வீடியோ
தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது "உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்'' என்று ஸ்பீக்கரில் ஒலித்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

பெரம்பலூர்: தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது "உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்'' என்று ஸ்பீக்கரில் ஒலித்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஒற்றை நபராக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சி 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் பெரம்பலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். அனைத்து கட்சிகளையும் தாக்கி பேசிய அவர், மிக கோபமாக விமர்சனங்களை வைத்தார். முக்கியமாக திராவிட கட்சிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
பெரம்பலூரில் சீமான் பிரச்சாரம் செய்த போதே அருகில் திமுக சார்பாக சிறிய பிரச்சார கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. இதனால் திமுகவின் பிரச்சார வாகனம் ஒன்று அந்த பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்தது. அதில் ரெக்கார்ட் செய்யப்பட்ட வாய்ஸ் பேசிக்கொண்டே இருந்தது.
சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது speakerஇல் "உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்" என்று கூவி சீமானிடம் wantedஆ வந்து மூக்குடைப்பட்டு சென்ற உடன்பிறப்புகள் 😂😂 pic.twitter.com/8PO3oiuqKj
— Mr.பழுவேட்டரையர் (@mrpaluvets) April 12, 2019
சரியாக சீமான் பேசும்போதே அந்த ரெக்கார்ட் செய்யப்பட்ட வாய்ஸ் ''உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்'' என்று கூறியது. இது சீமான் பேசுவதற்கு தடங்கலாக இருந்தது. இதனால் சீமான் உடனே பேச்சை நிறுத்தினார்.
ஆனால் சீமான் கொஞ்சமும் கோபம் அடையாமல் கூலாக, சூரியனுக்கு ஓட்டு போடுங்க, உலகம் இருட்டாகிடும்.. அவங்க பிரைட் ஆகிடுவாங்க.. இன்னும் இந்த உதயசூரியன் இப்படிதான் பேசுறாங்க.. அவங்க வெளிச்சத்தில் வாழுறாங்க, நாம்தான் பொசுங்கி போறோம்... ஹாஹாஹா.. இன்னும் சொல்றாங்க .. உதய சூரியன் ஏழைகளின் சின்னம்ன்னு.. என்ன ஒரு பித்தலாட்டம்'' என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த ரைமிங்கான பதிலடிக்கு நாம் தமிழர் தொண்டர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications