13 வயது சிறுவன் வெட்டிக் கொலை.. இரவு நேரத்தில் கொடூரம்.. அலறிய காரைக்கால்!
புதுச்சேரி: காரைக்கால் அருகே திருப்பட்டினத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருப்பட்டினத்தை சேர்ந்த சந்தோஷ் (13) என்ற எட்டாம் வகுப்பு மாணவன் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருப்பட்டினத்தில் நாகப்பட்டினம் - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் திருமலைராஜன் ஆற்று பாலத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பலியான சிறுவன் சந்தோஷின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவன் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் சந்தோஷ் வசித்து வந்த திருப்பட்டினத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவருடன் சந்தோஷ் விளையாடியதை அப்பகுதியினர் பார்த்ததாகவும், அதைத்தொடர்ந்து கொலை நடைபெற்றுள்ளதால் அந்த இளைஞரே சந்தோஷை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் கையுறைகளை ஆன்லைன் மூலமாக வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையில், கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரவு நேரத்தில் காரைக்காலில் 13 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை பதற வைத்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications