பிப்ரவரி 1ல் கிரகபிரவேசம்! திடீரென கால்வாயில் சரிந்து விழுந்த 3 அடுக்குமாடி வீடு.. புதுவையில் சோகம்
புதுவை: புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்குகளை கொண்ட மாடி வீடு சரிந்து விழுந்ததால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் கதறும் சம்பவம் பார்ப்பதற்கு வேதனையை ஏற்படுத்துகிறது.
புதுவையில் மேட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் அனைத்தும் உப்பனாறு வாய்க்கால் வழியாக வெளியேறும். ஆனால் இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளது.

இதற்கு மேல் பாலம் அமைத்து காமராஜர் சாலையில் இருந்து மறைமலை அடிகள் சாலை வரை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய பணப்பலன் கிடைக்காததால் இந்த பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மறைமலை அடிகள் சாலையைத் தாண்டி ஆட்டுப்பட்டி வழியாக வாய்க்காலை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலில் பக்கவாட்டு பகுதி சீரமைக்கப்பட்டு சுவர் எழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பக்க வாய்க்காலில் ஜேசிபி மூலம் மணல் அள்ளும் பணி நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து வாய்க்கால் ஓரம் இருந்த வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் மணல் அள்ளும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக மாநில செயலாளருமான அன்பழகனும் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு ஜேசிபி மூலம் மணல் அள்ளுவதை எதிர்த்தார். இதையடுத்து ஒதியன்சாலை போலீஸார் அங்கு விரைந்தனர்.
அங்கு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் திடீரென அப்பகுதியில் கட்டப்பட்ட 3 அடுக்கு மாடி கட்டடம் பாதியாக சரிந்து கால்வாயில் விழுந்தது. இதையடுத்து அங்கிருந்தோ தலைத்தெறிக்க ஓடினர். விசாரணையில் அந்த வீடு புதிதாக கட்டப்பட்டதாம். ஆட்டுப்பட்டில் சேகர்- சித்ரா தம்பதியினருக்கு சொந்தமான இந்த வீட்டிற்கு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கிரகபிரவேஷம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்ததாம்.
இந்த நிலையில் வீடு முற்றிலும் சரிந்து கால்வாயில் விழுந்ததை கண்ட சித்ரா கதறி அழுதார். இந்த காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உப்பனாற்று பணியினால் தங்கள் வீட்டை குருவி சேர்ப்பது போல் பணத்தை சேர்த்து கட்டிய வீடு இப்படி தரைமட்டமானது என சித்ரா கதறியது அங்கிருந்தோர் மனதை வேதனை அடைய செய்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications