புதுச்சேரி அருகே சோகம்.. பூட்டிய வீட்டுக்குள் 4 அழுகிய பிணங்கள்.. குடும்பத்தோடு தற்கொலை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    4 members in a family commits suicide in Puducherry

    புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஆரோவில்லில் பணிபுரியும் பெண் ஊழியர், அவரது கணவர் மற்றும் 2 மகள்கள் உள்ளிட்ட 4 பேர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் பகுதியில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி மகேஸ்வரி. ஆரோவில் பகுதியில் உள்ள ஆரோ பவுண்டேஷனில் வேலை பார்த்து வருகின்றார். இவர்களுக்கு 2 மகள்கள்.

    4 dead bodies found in locked house near Puduceherry

    இவரது மூத்த மகள் கிருத்திகா பணிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இளைய மகள் சமிக்ஷா எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள உறவினர்கள் சுந்தரமூர்த்தியுடன் திங்கள்கிழமை போனில் பேசியுள்ளனர். அதன்பின்பு நேற்று தொடர்பு கொண்டபோது சுந்தரமூர்த்தி மற்றும் அவருடைய மனைவியின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.

    4 dead bodies found in locked house near Puduceherry

    இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் நேரில் வந்து பார்த்தபோது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். உடல் அழுகிய நிலையில் இருந்தததால் ஆரோவில் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

    4 dead bodies found in locked house near Puduceherry

    ஆரோவில் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்கள் பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஆரோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+