புதுச்சேரிக்கு போலாமா.. 5 லிட்டர் கேன் பீர் அறிமுகம்.. களை கட்டும் புத்தாண்டு!
புதுச்சேரி புத்தாண்டை வரவேற்பதற்காக புதுச்சேரியில் 5 லிட்டர் கேன் பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதாலும், பல்வேறு வகையான மதுபானங்களை ருசித்து பார்ப்பதற்காகவும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தை சேர்ந்த ஆயிரகணக்கானோர் நாள்தோறும் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் புதுச்சேரியை குட்டி கோவா என்றும் அழைக்கின்றனர். மதுப்பிரியர்களின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வரும் புதுச்சேரியில் ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, புது வகையான மது வகைகள் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக காஷ்மீரிலிருந்து 5 லிட்டர் கேன் பீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது விற்பனைக்கு வந்துள்ள 5 லிட்டர் கேன் பீர் லெகர், ஸ்டிராங்க் ஆகிய ரகங்களின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் லெகர் ரூபாய் 1,850 க்கும் ஸ்டிராங்க் பீர் ரூபாய் 1,950 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 5 லிட்டர் பீரின் கடைசி சொட்டு வரை அதனுடைய தரம், சுவை இருக்குமென விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதோடு இதனுடன் கார்பன்- டை- ஆக்சைடு சிலிண்டர் இணைக்கப்பட்டுள்ளதால், எப்போதும் பிரஷாக பீர் கிடைக்கும். ஒருமுறை கேனை திறந்துவிட்டாலும், தொடர்ந்து கேஸ் பீருடன் கலக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து 25 நாட்களுக்கு இதனை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியும்.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்பதற்காக நட்சத்திர விடுதிகளும், ரிசார்ட்டுகளும் முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 லிட்டர் கேன் பீரால் இந்தாண்டு மேலும் வருவாய் பெருகுமென மதுபானக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications