செம.. அச்சு அசலாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போலவே.. 5.8 அடி உயரம்.. முழுக்க முழுக்க சாக்லேட்டில் சிலை
புதுச்சேரி: புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுச்சேரியில் 339 கிலோ எடையில் சாக்லெட்டுகளை கொண்டு 5.8 அடி உயரத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு, சாக்லெட் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள Zuka என்ற சாக்லெட் பேக்கரியில் முழுக்க முழுக்க சாக்லெட்டால் செய்யும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வருபவர் செஃப் ராஜேந்திரன். இவர் ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட்டால் செய்யப்படும் பொருட்களில் தன்னுடைய புதிய கலைத்திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், கடந்த காலங்களில் சாக்லெட்டை கொண்டு ரஜினிகாந்த் உருவம், ரயில், சச்சின் டெண்டுல்கர், அப்துல்கலாம், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன் ஆகியோரின் உருவங்களை சாக்லேட்டுகளை கொண்டு தயாரித்துள்ளார்.
இந்நிலையில் வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் 2020 புத்தாண்டையொட்டி மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது நினைவை போற்றும் வகையிலும், 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 5.8 அடி உயரத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் சாக்லெட் சிலையை வடிவமைத்துள்ளனர்.
161 மணி நேரத்தில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியனின் சாக்லெட் உருவம் சாக்லெட் பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த எஸ்.பி.பாலசுப்ரமணியனின் சாக்லெட் சிலை ஜனவரி 3-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சாக்லேட்டை கொண்டு தனது கலைத்திறமையை நிரூபித்து வருகிறார். சாக்லெட்டில் புதுமையை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற சாக்லெட்டாலான சிலைகளை உருவாக்கி வருவதாக செஃப் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications