பார்ப்பது போலீஸ் வேலை.. டார்கெட் விதவை பெண்கள் தான்.. சிக்க வைத்த சுதா..!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் விதவை பெண்ணை ஏமாற்றியதாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் போலீஸ்காரராக பணியாற்றும் ஒருவர், விதவை பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை கறந்ததாக புகார் எழுந்தது. இதைடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஏமாற்றியதாக எழுந்த புகாரில் போலீஸ்காரர் குணசேகரன் என்பர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே, கீழசுப்பராயபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுதா (வயது 39). இவரது கணவர் உயிருடன் இல்லை. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுதா திருநள்ளாறில் உள்ள காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். அந்த காய்கறி கடைக்கு செருமாவிலங்கை பகுதியை சேர்ந்த 42 வயதான குணசேகரன் அடிக்கடி வந்து செல்வாராம். இவர் காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

நெருக்கம்
சுதா வேலைபார்த்து வந்த காய்கறி கடைக்கு குணசேகரன் அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக மாறி உள்ளது. சுதா விதவை என்பதை தெரிந்து கொண்ட குணசேகரன், தனக்கும் திருமணமாகி விவகாரத்து ஆகி இருப்பதாக எனக்கூறி உள்ளார். அதனை சுதாவும் நம்பி உள்ளார். இதனால், சுதாவும் குணசேகரனும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.

கடன் தான் காரணம்
அதன்பின் சுதாவும் காவலர் குணசேகரனும் பலமுறை தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தார்களாம். பல மாதங்கள் சென்ற நிலையில் சுதா தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி இருக்கிறார், ஆனால் திருமணம் செய்ய மறுத்த குணசேகரன், தான் பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும், அந்த கடனை அடைத்து விட்டு கல்யாணம் செஞ்சுக்கிறேன் என்று கூறி நாட்களை கடத்தி வந்தாராம்.

திருமணத்திற்கு மறுப்பு
இதனிடையே குணசேகரனை திருமணம் செய்து கொள்ள, அவருக்கு கடன் தான் சிக்கலாக இருக்கிறது என நம்பிய சுதா, தனது 7 சவரன் தங்க நகையை அடமானம் வைத்தும், சுய உதவிக்குழு மற்றும் வங்கிகள் மூலம் கடன் வாங்கி 7 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை குணசேகரனிடம் கொடுத்தாராம். அதனை வாங்கிக் கொண்ட பின்னும் குணசேகரன் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாக சுதா குற்றம்சாட்டியுள்ளார்.

திருநள்ளாறு போலீஸ்
தொடர்ந்து திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினால் கொன்றுவிடுவேன் என சுதாவை குணசேகரன் மிரட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுதா திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து திருநள்ளாறு காவல் துறையினர் குணசேகரனை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர். தொடர்ந்து குணசேகரனிடம் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே குணசேகரன், சுதாவை மட்டுமல்லாமல் மேலும் சில பெண்களிடம் நகை, பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. அதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications