கடன் தொல்லையால் என் தம்பி தற்கொலை செய்யலை.. மிரட்டியிருக்காங்க.. ஆனந்தராஜ் பரபர புகார்
புதுச்சேரி: மிரட்டல் காரணமாகவே என் தம்பி தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி அரசும் காவல்துறையும் உரிய விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரி திருமுடி நகர் பகுதியில் வசித்து வந்தவர் கனகசபை. இவர் பிரபல திரைப்பட நடிகர் ஆன்ந்தராஜின் தம்பி ஆவார். திருமுடி நகரில் வசித்து வந்த கனகசபை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதனிடையே கனகசபை நேற்று காலை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து ஏலச்சீட்டு போட்டவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தங்களது பணத்தை உடனடியாக தரவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் அவரது உடலானது கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் ஏலச்சீட்டு காரணமாகவும் கடன் தொல்லை காரணமாகவும் இறந்ததாக தகவல்கள் வெளியாகியது.

இதையடுத்து தனது தம்பியின் மரணத்திற்கு விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்தராஜ், தனது தம்பி கடன் பிரச்சினைக்காக தற்கொலை செய்யது கொள்ளவில்லை. மிரட்டல் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார்.

தனது தம்பி சமீபத்தில் ஒரு வீடு வாங்கியதாகவும், அந்த வீடு சம்பந்தமாக சிலரால் மிரட்டப்பட்டதால் மனவேதனையில் இருந்த அவர், நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் சிலரை குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை பற்றி புதுச்சேரி காவல் துறையினர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது. தன் தம்பியின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் தாம் எந்த தகவலையும் வெளியிட முடியாது என தெரிவித்தார்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications