‘எங்களுக்கு ரோட்ஷோ நடத்தியே ஆகணும்’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மீண்டும் சந்தித்த புஸ்ஸி ஆனந்த்
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி ரோட்ஷோ மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் காவல்துறையினர் ரோட்ஷோ வுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் விஜய்யின் புதுச்சேரி விசிட் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் விஜய் ரோட்ஷோ நடத்துவது தொடர்பாக ரங்கசாமியுடன் புஸ்ஸி ஆனந்த் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (டிசம்பர் 5 ஆம் தேதி) புதுச்சேரியில் ரோட்ஷோ மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த நவம்பர் 26 ஆம் தேதி புதுச்சேரி காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வந்தனர். அதில் புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. பொதுக் கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை கூறியிருந்தது.

விஜய் புதுச்சேரி விசிட்
இது தவெக மற்றும் விஜய் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு கடந்த 2 மாதங்களாக விஜய் வெளியில் அதிகம் தலை காட்டுவதில்லை. தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தவெக சார்பில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் அவரின் புதுச்சேரி விசிட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
விஜய் காலாப்பட்டி தொடங்கி கன்னியக்கோவில் வரை ரோட்ஷோ நடத்தி, சோனாம்பாளையம் அருகே பொதுக்கூட்டத்தில் உரையாட திட்டமிடப்பட்டிருந்தத. இதற்காக தவெக சார்பில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் காவல்துறையினரை சந்தித்து 4 முறை அனுமதி கடிதம் வழங்கியிருந்தனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் நேரடியாக புதுச்சேரி சென்று அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
ரங்கசாமி - ஆனந்த் சந்திப்பு
ரங்கசாமி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை அவர்கள் சந்தித்து ஆலோசனையும் நடத்தியிருந்தனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்றும் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு கருதி காவல்துறை விஜய் ரோட்ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. நன்கு ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியிருந்தனர்.
இது தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து விஜய்யின் புதுச்சேரி விசிட் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ரங்கசாமியின் அலுவலகத்தில் வைத்து கடந்த 1 மணி நேரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மீண்டும் கோரிக்கை
அப்போது ரோட்ஷோ நடத்த மீண்டும் அனுமதி கேட்டு தவெக சார்பில் ரங்கசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் முடிவில் புதுச்சேரி அரசு தரப்பில் நல்ல செய்தி சொல்வார்கள் என்று தவெக வினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். புதுச்சேரி அரசு தரப்பில் அங்குள்ள எதார்த்த சிக்கல்களை ஆனந்திடம் எடுத்துரைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications