அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணியில் 2 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் நிலையில், 2 தொகுதிகளுக்கும் இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. முதலில் என்.ஆர்.காங்கிரஸ், - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், தொகுதிப் பங்கீட்டில் இழுபறியே நீடித்துவந்தது. பாஜக அதிக இடங்களில் போட்டியிட கோரிக்கை வைத்தபோதும் என்.ஆர்.காங்கிரஸ் அதனை ஏற்க மறுத்துவிட்டது.

மேலும் அதிக தொகுதிகளில் நாங்களே போட்டியிடுவோம் என்றும், கூட்டணியில் வேறு கட்சிகளையும் இணைக்கக் கூடாது என்றும் நிபந்தனை வைத்தது என்.ஆர்.காங்கிரஸ். நீண்ட இழுபறிக்கு பிறகு 2026 சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என். ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதிமுகவுக்கும், லட்சிய ஜனநாயக கட்சிக்கும் இணையாக தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அதிமுவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அதிலிருது 3 தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 9 இடங்களில் போட்டியிட்ட பாஜகவுக்கு தற்போது கூடுதலாக ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. 1974, 1977-78 என இரண்டு முறை புதுச்சேரியை ஆண்ட அதிமுக, இந்த முறை வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவது கட்சியினரை அதிருப்தி அடையச் செய்தது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், அதிமுக 2 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி தர்மம் காரணமாக, 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். உப்பளம் தொகுதியில் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் புதுச்சேரி மாநில முன்னாள் துணைச் செயலாளர் காந்தி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மண்ணடிபட்டு தொகுதியில் நமச்சிவாயம் போட்டியிட உள்ளார். முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார், மணவவெளி தொகுதியில் ஏம்பளம் ஆர்.செல்வம், திருநள்ளாறு தொகுதியில் ராஜசேகரன், ஊசுடு தொகுதியில் தீப்பாய்ந்தான், காலாபேட் தொகுதியில் கல்யாணசுந்தரம், ராஜ்பவன் தொகுதியில் ராமலிங்கம், நிரவி தொகுதியில் மீனாட்சி சுந்தரம், மாஹே தொகுதியில் தினேஷன், காரைக்கால் தெற்கு தொகுதியில் அருமுருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
-
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!












Click it and Unblock the Notifications