புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ்.. மாணவர்கள் ஹேப்பி

Google Oneindia Tamil News

புதுவை: புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் உலகில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. சுமார் ஓராண்டாகியும் இந்த கொரோனா இந்தியாவை விட்டு செல்லவில்லை.

All pass for Class 1 to Class 9 in Puducherry

இதனால் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிச் செல்லவில்லை. தமிழகம் மற்றும் புதுவையில் 1 முதல் 11 வகுப்பு வரை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன. பல மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஹேப்பி நியூஸ்... அடுத்து இந்த வயதுள்ளவர்களும்... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியும்

இந்த நிலையில் புதுவையில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியானது. இதற்கான ஆணையை துணை நிலை ஆளுநர் பொறுப்பு தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டார்.

அதில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அது போல் மாஹே மற்றும் யேனம் தொகுதிகளில் ஆந்திரா, கேரளா விதிகளுக்குள்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Puducherry announces all pass for class 1 to 9 because of Corona pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X