தமிழ்நாட்டை தொடர்ந்து... புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வு ரத்து... முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுவை: மாணவர்கள் நலன் கருதி புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே உச்சத்திலிருந்து கொரோனா பரவல் 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மண நேரத்தில் மட்டும் நாட்டில் 1.06 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா குறையத் தொடங்கியிருந்தாலும், தடுப்பூசிகள் பணிகள் முழுமையாக நடைபெறாமல் பொதுத்தேர்வுகளை நடத்துவது சரியானதாக இருக்காது எனச் சுகாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாட்டிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் புதுச்சேரியிலும் இந்தாண்டுக்கான +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவையில் உள்ள மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications