அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி சரிந்த 15 போலீசார்.. புதுச்சேரியில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் அடுத்தடுத்து 15 காவலர்கள் மயங்கி சரிந்ததால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி காவல்துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் வண்ண விருது வழங்கும் விழா இன்று கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று விருது வழங்கினார்.

Amit Shah Event in Puducherry 15 Police Personnel Faint Due to Heat

முன்னதாக நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புதுச்சேரிக்கு நேற்று இரவு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இன்று கோரிமேடு காவலர் மைதானத்துச் சென்ற அமித் ஷா, காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது வழங்கி உரையாற்றினார். புதுச்சேரியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கி உரையாற்றினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த நிகழ்வில் பேசிக் கொண்டிருந்த போது காவலர்கள் மயங்கிச் சரிந்தனர். வெயிலின் தாக்கத்தால் அடுத்தடுத்து 15 காவலர்கள் மயங்கி விழுந்தனர். மயங்கி சரிந்த காவலர்களை சக காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அமித் ஷா பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை செய்த காவலர்கள் 4 மணி நேரமாக வெயிலில் நின்றுள்ளனர். வெயிலின் கடுமையால் நீரிழப்பு ஏற்பட்டு போலீசார் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+