Amit Shah: தேசியக்கொடிக்கு பதிலாக காவிக்கொடி.. டென்ஷனான அமித்ஷா! புதுவை நிகழ்ச்சியில் பதறிய பாஜக நிர்வாகிகள்!

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுவையில் இன்று நடைபெற்ற தேசியக்கொடி யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 100 அடி நீள தேசியக்கொடியை வைத்தும் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அமித்ஷாவிடம் தேசியக்கொடிக்கு பதிலாக காவிக்கொடியை பாஜக தலைவர் நமச்சிவாயம் கொடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிக்ளில் கலந்து கொண்டார். குறிப்பாக, புதுவை முருகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நடைபெற்ற ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை அமித்ஷா, தொடங்கி வைக்க தயாராக இருந்தார்.

Amit Shah Irked After Being Handed Saffron Flag Instead of National Flag BJP Cadre Flustered at Puducherry Event

டென்ஷன் ஆன அமித்ஷா

அப்போது நமச்சிவாயம் அமித்ஷாவிடம் காவிக்கொடியை கொடுத்தார். இதை பார்த்ததும் டென்ஷனான அமித்ஷா, அந்த நிர்வாகியை கடிந்து கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு தேசியக்கொடியை அமித்ஷாவிடம் கொண்டு வந்து கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்ட அமித்ஷா, தேசியக்கொடி யாத்திரையை தொடங்கி வைத்தார். மூவர்ணக்கொடிக்கு பதிலாக காவிக்கொடியை அமித்ஷாவிடம் கொடுத்த நிகழ்வு அங்கு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

5 போலீசார் மயக்கம்

உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். சென்னைக்கு தனி விமானத்தில் வந்த அமித்ஷா, சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை சென்ற அமித்ஷா, அங்குள்ள அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு தரிசனத்தை முடித்துக்கொண்ட பிறகே இரவே புதுவைக்கு சென்றார். இரவு கவர்னர் மாளிகையில் தங்கிய அமித்ஷா இன்று காலை 8 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கோரி மேடு போலீஸ் மைதானம் சென்றார்..

காலை 8.15 மணி முதல் 10.10 வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருதை காவல்துறையினருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது சுமார் 5 காவலர்கள் மயக்கம் அடைந்து விழுந்ததால் விழாவில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புதுவை அக்கார்டு ஹோட்டல் சென்ற அமித்ஷா, அங்கு சிறிது ஓய்வுக்கு பிறகு கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் பலத்த பாதுகாப்பு

அதன்பிறகு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு புதுவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பினார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல உள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு புதுவையில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது. புதுவை ஆளுநர் மாளிகை, கோரிமேடு காவல்துறை மைதானம், அக்கார்டு ஹோட்டல் என அமித்ஷா வருகை தந்த இடங்கள் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. மத்திய ரிசர்வ் படை காவல் படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அமித்ஷா வருகையால் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து மாற்றப்பட்டு இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+