புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் உடன் விஜய் கூட்டணி? ரங்கசாமியை சந்தித்த ஆதவ் அர்ஜுனா.. என்ன நடந்தது?
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்தித்துள்ளார். தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ரங்கசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா இருவரும் அரசியல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். ஓராண்டுக்கும் மேலாக தவெக தரப்பில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தவெக தலைவர் விஜய் தொடர்ச்சியாக திமுக மற்றும் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

அதேபோல் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்த பின், விஜய் தனது பிறந்தநாள் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வரும் காலங்களில் தவெக முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே தவெக தரப்பில் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவெகவின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. புதுச்சேரி உப்பளம் அருகே உள்ள மைதானத்தில் 40வது இளைஞர்களுக்கான தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பு தலைவர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது ரங்கசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையில் அரசியல் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தவெகவின் பொதுச்செயலாளராக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளன்று அவரது வீட்டிற்கே சென்று ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். இதனால் அடுத்த தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் உடன் விஜய்-ன் தவெக கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வரும் ரங்கசாமி, அடுத்த தேர்தலுக்கு முன்பாக கூட்டணியை முறித்து விஜய் உடன் சேர வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
நெல்லையில் தாமிரபரணி வரலாற்றுச் சுவடுகளை மறைத்து போஸ்டர்கள்.. தவெகவினர் செயலால் சர்ச்சை -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை











Click it and Unblock the Notifications