புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரானார் ஏ.வி.சுப்ரமணியன்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏ.வி.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரை மாற்றி புதிய தலைவராக ஏ.வி.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த ஏ.வி. சுப்ரமணியன் ஏற்கனவே மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய ரங்கசாமி, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானார்.

ரங்கசாமி தனி கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த 2016 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை, கட்சியில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நமச்சிவாயத்தை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக நியமித்து தேர்தலை சந்தித்தது. இதனால் இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு நமச்சிவாயத்தின் பங்கு அதிகமாக இருந்தது.

இதன்காரணமாக நமச்சிவாயமே முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் நமச்சிவாயம் அணி, நாராயணசாமி அணி என இரு அணிகளாக காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தற்போது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு தரப்புக்கும் பொதுவான நபரான ஏ.வி.சுப்ரமணியத்தை மாநில தலைவராக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications