பழையன கழிதலும்.. புதியன புகுதலும்.. புதுச்சேரியில் போகி.. கோலாகலக் கொண்டாட்டம்!
புதுச்சேரி: பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று, புதுச்சேரி முழுவதும் போகிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேளதாளங்களை இசைத்து, போகி பண்டிகையை கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள், போகிப்பண்டிகையுடன் இன்று தொடங்குகின்றது. குறிப்பாக பொங்கல் என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும், ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். பொங்கல் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாக கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம் களை கட்டும்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடும் குளிரில், அதிகாலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து வந்து, வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு எரித்தார்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப போகிப் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் போகிப்பண்டிகையினையொட்டி சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவைகளை எரிக்காமல் கிராமப்புற மக்கள் போகி பண்டிகையை கொண்டாடியது, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றது.

-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications