புதுச்சேரியிலும் தெறிக்கும் விசில் சத்தம்.. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் குஷியில் தவெக தொண்டர்கள்!
புதுச்சேரி: தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் பொதுச் சின்னமாக விசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே தமிழ்நாட்டில் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுச்சின்னத்தில் களமிறங்குகிறது.

புதுச்சேரியில் தவெக-வை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது விஜய்யின் திட்டமாக உள்ளது. புதுச்சேரியில் உள்ள தொகுதிகளில் குறைவான வாக்காளர்கள் தான் என்பதால், தீவிரமாகப் பணியாற்றினால் வெற்றி பெற்றுவிடலாம் என்பது விஜய்யின் கணக்கு. சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பிரச்சாரம் செய்தபோதும் தனது ஆசையை வெளிப்படுத்தினார் விஜய்.
புதுச்சேரியில் விஜய் பேசும்போது, “1977ல் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால், அதற்கு முன்பே 1974லேயே புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைந்தது. நமக்காக வந்தவர் எம்ஜிஆர், அவரை தமிழ்நாட்டில் மிஸ் பண்ணிடாதீங்க என நமக்கு அலர்ட் பண்ணியதே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மால் மறக்க முடியுமா?
தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் கிட்டத்தட்ட 30 வருடங்களாக என்னை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும் குரல் கொடுப்பவன் அல்ல, புதுச்சேரி மக்களுக்காகவும் குரல் கொடுப்பான். அது என் கடமையும் கூட. புதுச்சேரியில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்; நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்” எனப் பேசி இருந்தார்.
தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் புதுச்சேரிக்கும் சேர்த்து மிகப்பெரிய திட்டம் வைத்திருக்கிறார் விஜய். அடுத்த 50 வருடத்திற்கு புதுச்சேரி வரலாற்றை மாற்ற காத்திருக்கிறார் விஜய். காற்று, வெள்ளத்தை எப்படி நிறுத்த முடியாதோ அப்படிதான் தவெகவை நிறுத்த முடியாது” எனப் பேசி இருந்தார்.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசும்போது, “புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026-ம் ஆண்டு விஜய் வருவார்” எனப் பேசியிருந்தார்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications