புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!
புதுச்சேரி: புதுச்சேரியில் 10 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - அதிமுக - லஜக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்று மே 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாள்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக - அதிமுக - லஜக கூட்டணி அமைத்துள்ளன. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகள், பாஜக 10, அதிமுக 2, லஜக 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. முன்னதாக லஜகவை கூட்டணியில் சேர்க்க ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக தலைமை தலையிட்டு இந்தக் கூட்டணியை உறுதி செய்தது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் நிலையில் 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. மண்ணடிபட்டு தொகுதியில் நமச்சிவாயம் போட்டியிட உள்ளார். முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார், மணவவெளி தொகுதியில் ஏம்பளம் ஆர்.செல்வம், திருநள்ளாறு தொகுதியில் ராஜசேகரன், ஊசுடு தொகுதியில் தீப்பாய்ந்தான், காலாபேட் தொகுதியில் கல்யாணசுந்தரம், ராஜ்பவன் தொகுதியில் ராமலிங்கம், நிரவி தொகுதியில் மீனாட்சி சுந்தரம், மாஹே தொகுதியில் தினேஷ் என மொத்தம் 9 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது.
மண்ணாடிப்பட்டு - ஏ. நமச்சிவாயம்
ஊசுடு (தனி) - இ. தீப்பாய்ந்தான்
காலாப்பட்டு - பி.எம்.எல். கல்யாணசுந்தரம்
ராஜ் பவன் - வி.பி. ராமலிங்கம்
முதலியார்பேட்டை - ஏ. ஜான்குமார்
மணவெளி - ஏம்பலம் ஆர். செல்வம்
திருநள்ளாறு - ஜி.என்.எஸ். ராஜசேகரன்
நிரவி - டி.ஆர். பட்டினம் - டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்
மாஹே - ஏ. தினேஷன்
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில், அமைச்சராகப் பொறுப்பேற்ற பாஜகவைச் சேர்ந்த காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு, 8 மாதங்களுக்கு மேலாக இலாகா ஒதுக்கப்படவில்லை. லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனும், எல்.ஜே.கே கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் நெருக்கம் காட்டுவதால், அவருக்கு இலாகா ஒதுக்காமல் 8 மாதங்களுக்கும் மேலாக முதல்வர் ரங்கசாமி புறக்கணித்து வந்தார்.
இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, லஜக உடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில், முதலியார்பேட்டை தொகுதி வேட்பாளராக ஜான் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், காமராஜ் நகர் தொகுதி லஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications