து.முதல்வர் பதவி இல்லையா? முதல்வர் பதவியை மறந்துடுங்க கட்சியும் இருக்காது ரங்கசாமியை நெருக்கும் பாஜக
புதுச்சேரி: புதுச்சேரியில் 24 நாட்களுக்கு பின் எம்.எல்.ஏக்கள் மட்டும் பதவியேற்ற நிலையில் துணை முதல்வர் பதவியை பெறாமல் ஓயப் போவது இல்லை என கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால் துணை முதல்வர் பதவியை தரப்போவதே இல்லை என்பதில் முதல்வர் ரங்கசாமி உறுதியாக உள்ளாராம்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை கைப்பற்றியது. முதலில் என்.ஆர். ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றார்.

எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதாவது 24 நாட்களுக்குப் பின்னர் எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ரங்கசாமி பிடிவாதம்
இந்நிலையில் துணை முதல்வர் பதவியும் 2 அமைச்சர்களும் தேவை என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அமைச்சர் பதவி தர தயாராக இருக்கும் ரங்கசாமி, துணை முதல்வர் பதவியை தரப்போவது இல்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

பாஜக மீது அச்சம்
ஏனெனில் இப்போதே பாஜக 3 நியமன எம்.எல்.ஏக்கள், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் என கூடுதலாக 6 எம்.எல்.ஏக்கள் பலம் பெற்றுள்ளது. சட்டசபையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் தமது தலைமையிலான ஆட்சியை பாஜக கவிழ்த்துவிடும் என அஞ்சுகிறார் ரங்கசாமி.

ரங்கசாமிக்கு எச்சரிக்கை
அதேநேரத்தில் பாஜகவோ, துணை முதல்வர் பதவியை தராமல் ரங்கசாமி இழுத்தடிப்பதை இம்மியும் ரசிக்கவில்லையாம். இதனால் செம கடுப்பில் உள்ள பாஜக, ரங்கசாமிக்கு ஒரே ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறதாம்.

பாஜக ஆட்சி அமைக்கும் என நெருக்கடி
அதாவது துணை முதல்வர் பதவியை எங்களுக்கு தராமல் இழுத்தடித்து கொண்டே போனால் பாஜகவே ஆட்சி அமைக்க களமிறங்கும்; என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் எங்கள் பக்கம் வருவார்கள் எனவும் மிரட்டி விட்டிருக்கிறதாம். இதனால் என்ன செய்வது என தெரியாமல் ரங்கசாமி தரப்பு விழிபிதுங்குகிறதாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications