விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா?
புதுச்சேரி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் குறித்த ஜோதிட கணிப்புகளும் வெளியாகி வருகிறது. தவெக தலைவர் விஜய் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்று திமுக கூட்டணியினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் மனதில் பாஜக இருக்கிறது. அது எங்களுக்கு சந்தோஷம் என்று குஷ்பூ சொல்லியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிள்ள பாஜக மாநில துணை தலைவர் குஷ்பூ கூறுகையில், "அண்ணாமலை போட்டியில்லை என்பது அவரும், தலைமையிலும் எடுத்த முடிவு. தனிப்பட்ட முறையில் யாரும் கருத்து சொல்ல முடியாது. அதை எடுத்துக் கொள்ளவும் கூடாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. ஏன் எடுத்தார்கள், எதற்கு எடுத்தார்கள் என்பது அவருக்கு தான் தெரியும்.

நேற்று வந்தவர்களுக்கு எல்லாம்
ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், இப்போது உங்களின் முன்பு புதுச்சேரியில் இருந்திருக்க முடியாது. என் கணவர் மதுரையில் நிற்கிறார். இந்த தேர்தலில் நான் சாதாரண கார்யகர்தாவாக பயணிக்கவே விரும்பினேன். நான் மதுரையிலும் இருக்க வேண்டும். இப்போது கேரளா சென்று வந்துள்ளேன். புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வேண்டும்.
மதுரை பயணம்
மதுரையில் 2 நாள் பயணம் செய்தேன். மறுபடியும் நாளை மறுநாள் மதுரை செல்வேன். தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விஜய் நேற்று தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை விட்டுவிடுங்கள் அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியை பற்றி எதுவும் தெரியாது. விமர்சிக்க கூடாது என்றில்லை. அரசியலை பற்றி தெரிந்தவர்களை விமர்சிக்கலாம்.
விஜய் மனதில் பாஜக
விஜய் நேற்று தான் அரசியலுக்கு வந்துள்ளார். விஜய் நேற்று பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் யாருக்கு வாக்கு சேகரிக்க வேண்டுமோ, அவர் கட்சி நிர்வாகிகள் பெயரை சொல்லாமல், எங்கள் கட்சி வேட்பாளர் பெயரை சொல்லி சென்றுள்ளார். அவர் மனதில் நாங்கள் இருக்கிறோம் என்பது உறுதியாக தெரிகிறது. விஜய் மனதில் பாஜக இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. பாஜக வேட்பாளர் செல்வம் பெயரை தானே சொல்லி சென்றார். அதுவரை எங்களுக்கு சந்தோஷம்"
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி











Click it and Unblock the Notifications